Rabu, 13 April 2011

Charles Santiago

Charles Santiago


வளர்ச்சி கண்ட மாநிலத்தில் வறுமை கொடி கட்டி பறக்கிறது : சார்லஸ்

Posted: 12 Apr 2011 11:58 PM PDT

மூலம் :- செம்பருத்தி

  • Tuesday, April 12, 2011 5:21 pm
  • சரவாக் ஒரு வளர்ச்சி கண்ட மாநிலம். பொருளாதார ரீதியில் எழுச்சிக் கண்ட மாநிலம், பல மூலப் பொருட்கள் கொண்ட வளம் கொண்ட மாநிலம் என்றெல்லாம் கூறப்பட்டு வருவது நாம் அறிந்த ஒன்றே. ஆனாலும் உண்மையில் அங்கு வறுமைத்தான் கொடிக் கட்டி பறக்கிறது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கவலை தெரிவித்தார்.

    குறிப்பாக சரவாக்கில் உள்ள நீளமான வீடுகளில் (லோங் ஹவுஸ்) வசிக்கும் மக்களின் நிலைமைப் மிக மோசமாக உள்ளதாக சார்ல்ஸ் தெரிவித்தார்.

    அங்குள்ள மக்களின் பொருளாதாரம் மிக வீழ்ச்சியான நிலையில் உள்ளது. அதுமட்டுமின்றி 500 000-திற்க்கும் மேலான மக்கள் வேலை வாய்ப்பில்லாமல் தவிக்கும் அவல நிலையையும் பிழைப்பிற்காக வெளி மாநிலங்களில் வேலைத் தேடி அலையும் மக்களின் நிலையை பார்க்கும் போது உள்ளம் குமுறுகின்றது என சார்ல்ஸ் மேலும் கூறினார்.

    குறிப்பாக‌ இபான் மக்க‌ள் வேலைக்காக‌ தீப‌க‌ற்ப‌ ம‌லேசியாவிலும் சிங்க‌ப்பூரிலும் அலை மோதிக் கொண்டும், அவ‌ர்க‌ளின் குடும்ப‌த்தைச் சமாளிக்கின்ற‌ன‌ர் என‌ அவ‌ர் மேலும் விளக்கினார்.

    இவ்வாறு மக்களின் நிலைமை மோசமாக இருக்கும் தருணத்தில், ஸ்ரீ அமானில் உள்ள மருத்துவமனையின் மறு சீரமைப்பிற்கு ரிம 200 மில்லியன் வழங்கியுள்ளார் நமது பிரதமர் நஜிப் துன் ராசாக் அவரின் இந்த செயல் வரவேற்க்கத்தக்க ஒன்றே சரவாக் மக்கள் முறையான மருத்துவமனையில்லாமல் பரிதவிக்கும் நிலைமையைக் கண்டு அரசாங்கம் உதவ முன்வந்துள்ளது பெருமைக்குரிய விஷயமே.

    ஆனாலும் எண்ணுள் எழும் கேள்வியே ஏன் இத்துணை வருடம் கழித்து இப்பொழுதுதான் மக்களுக்கு உதவி செய்ய அரசாங்கம் முன் வருகிறது? 53 வருடங்காலமாகச் சரவாக் மக்கள் அல்லல் பட்டது அவர்களது கண்களுக்குப் புலப் படவில்லையா? இல்லை அவர்கள் வறுமையில் வாடினால் நமக்கென்ன? அதிகாரம் நம் கையில்தானே உள்ளது, எதுக்கு அஞ்ச வேண்டும் எனும் மனப் போக்கில் இருந்து விட்டதா அரசாங்கம்? என கேள்வி எழுப்பினார் சார்ல்ஸ்.

    அரசாங்கம் என்பது மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்யும் ஒன்றாக இருத்தல் வேண்டும். மக்களின் பிரச்சனைகளை தீர்த்து அவர்களது வாழ்க்கை தரத்தை உயர்த்தி, மக்களும் வளர்ச்சிக் கண்டு நாடும் வளர்ச்சிக் காண உழைக்க வேண்டும்.

    ஆனால் மலேசியாவிலோ தேர்தல் நடந்தால் மட்டும் தான் மக்களின் பிரச்சனைகள் அரசாங்கத்தின் கண்களுக்கு தெரிகிறது. தேர்தல் காலங்களில் மட்டும்தான் மக்களின் பிரச்சனை தீர்க்கப் படுகின்றது. இதைப் பார்த்தால் மக்களின் பிரச்சனை தீர ஒவ்வொரு மாதமும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் போல் தெரிகிறது.

    ஆகவே, தேர்தலில் வீழ்ந்து விடுவோம் என பயந்து மக்களின் நலன் கருதி இதை செய்கிறோம் அதைச் செய்கிறோம் எனப் பாசாங்குக் காட்டாமல் அதிகாரத்தில் இருக்கும் அரசாங்காம் எப்பொழுதும் மக்களுக்கு உழைக்க முன் வர வேண்டும் என சார்ல்ஸ் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார்.

    அதுமட்டுமில்லாது மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்து வந்தால் எக்காலத்திலும் எதிர்கட்சிகளுக்கு தே.மு பயப்படத் தேவை இல்லை என சார்ல்ஸ் அரசாங்கத்தை நினைவுறுத்தினார்.


    மாணவர் எழுச்சி முகாம்

    Posted: 12 Apr 2011 11:47 PM PDT

    மூலம் :- மலேசிய நண்பன்


    அணு உலை திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

    Posted: 12 Apr 2011 11:39 PM PDT

    மூலம் :- மலேசிய நண்பன்


    Tiada ulasan:

    Catat Ulasan