Selasa, 26 April 2011

Charles Santiago

Charles Santiago


வீட்டிற்கும் நாட்டிற்கும் பெண்களின் பங்கு அளப்பரியது

Posted: 26 Apr 2011 08:43 PM PDT

மூலம் :- செம்பருத்தி
Wednesday, April 27, 2011 1:04 am

பெண்கள் நாட்டின் கண்கள்; அவர்களின் பங்கு வீட்டின் முன்னேற்றத்திற்கும் நாட்டின் மேம்பாட்டிற்கும் மிக முக்கியம் என கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "பெண்களின் உரிமை மற்றும் குடும்ப வன்முறை" பட்டறையில் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ உரையாற்றினார்.

கிள்ளானில் வாழும் பெண்கள் முக்கியமாக தனித்து வாழும் தாய்மார்கள், குறைந்த வருமானம் கொண்ட பெண்கள், குடும்ப பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டிருக்கும் பெண்கள் என 30 பெண்மணிகள் இந்த பட்டறையில் கலந்துக் கொண்டு பயனடைந்தனர்.

கிள்ளானில் வாழும் பெண்களை திரட்ட பல இன்னல்களை எதிர்நோக்கினாலும் எதிர்பார்த்த அளவிற்கு ஆதரவு கிடைத்த‌து. இவர்களது ஆர்வமும் அக்கறையும் போல் எல்லாப் பெண்களுக்கும் இருந்துவிட்டால் நாட்டின் பெரும் முன்னேற்றத்தை நாம் காண முடியும் என ஏற்பாட்டாளரும் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரின் உதவியாளருமான செல்வி து.ரேவதி கூறினார்.

உதாரணத்திற்கு பின்லாந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் பெண்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது என சுட்டிக் காட்டிய அவர், நாட்டின் தலையெழுத்தையே பெண்களால் மாற்ற முடியும், அதற்கு பெண்கள்தான் முன்வரவேண்டும் எனவும் சொன்னார்.

இப்பட்டறையில் உரையாற்றிய சார்ல்ஸ் சந்தியாகோ, பெண்கள் சாதிப்பதற்கு அதிகம் உள்ளது. ஆனால் அதற்கு முதலில் அவர்களது உரிமையை தெரிந்துக் கொள்வது மிக மிக முக்கியம். அவர்களது அடிப்படை உரிமையை தெரிந்துகொண்டால் மட்டுமே பல விசயத்தில் உரிமையைத் தட்டிக் கேட்கமுடியும் என சார்ல்ஸ் வலியுறுத்தினார்.

பெண்கள் அவர்களை வளர்த்துக் கொண்டால்தான் குடும்பத்தின் வளர்சியை உறுதிப்படுத்த முடியும். குடும்பம் வளர்சிகண்டால் நாடும் வளர்சியடையும். தற்போது பெண்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். கல்வியிலும் மட்டுமில்லாது பல துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். இவ்வாறு பெண்கள் முன்னேற்றம் அடைய அரசாங்கம் உதவவேண்டியதன் அவசியத்தை கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் சுட்டிக்காட்டினார்.

இப்பெண்மணிகள் குடும்பத் தலைவன் இல்லாமல் குறைந்த வருவாயிலே குடும்பத்தை சமாளித்து வருகின்றனர். ஒரு சிலர் உணவுக்கு வழியில்லாமலும்,வாழ்க்கை நடத்த வழியில்லாமலும்,பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாமலும் பல துன்பங்களை எதிர்நோக்கும் இவ்வேளையில், அடிப்படை பொருட்களின் விலை ஏற்றம் இன்னும் அவர்களை வெகுவாக பாதிக்கின்றது என்பதை அரசாங்கம் புரிந்து பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த அரசாங்கம் ஆலோசிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

இப்பட்டறையில் கலந்துக் கொண்ட ஒரு பெண்மணி "சில சமயங்களில் நகராட்சி மன்றத்திடம் நாங்கள் புகார் செய்யப் போனால் எங்களை சரியாக கவனிக்காமல் இருக்கின்றனர்" என தனது வருத்தத்தை தெரிவித்ததோடு மட்டுமில்லாமல் இதற்கு காரணம் தாங்கள் ஏழை மக்கள் என்பதாலும் பெண்கள் என்பதாலும் தான் இப்படி நடக்கின்றதா?" எனவும் கேள்வி எழுப்பினார். பாமர மக்களிடம் நல்லுறவை வளர்த்து அவர்களின் பிரச்சனைக்கு கை கொடுக்க வேண்டியது அவர்களின் தலையாய கடமை என்பதை அவர் மேலும் வலியுறுத்தி மற்ற பெண்களுக்கும் உற்சாகம் ஊட்டினார்.

ஒரு சில பெண்கள் தாங்கள் சிறிய வியாபாரம் செய்ய ஆசைப்படுகிறோம். ஆனால் எங்களுக்கு போதுமான வசதி வாய்ப்புகள் இல்லை என புலம்பியதும் அவர்கள் தங்கள் வாழ்க்கையை சமாளிக்க பணம் மிக முக்கியம் எனக் கூறி அரசாங்கத்திடம் உதவியை எதிர்பார்க்கிறோம் என கூறியதும் அவர்களது ஆர்வத்தையும் ஏழ்மை நிலையையும் காட்டுகிறது.

இப்பட்டறையை வழிநடத்திய எம்மவரிலிருந்து செல்வி.ஜனர்த்தனி கிள்ளான் பெண்களின் ஆர்வத்தையும் பங்கேற்பையும் பாராட்டினார்.

 


சட்டவிரோத கூட்டம்- போலீஸ் விசாரணை பயப்படமாட்டேன்- சார்ல்ஸ்

Posted: 26 Apr 2011 08:40 PM PDT

மூலம் :- மலேசிய நண்பன்


அடுத்த தேர்தலில் சரவாக்கில் ஆட்சி மாற்றம் உறுதி.

Posted: 26 Apr 2011 08:31 PM PDT

மூலம் :- மலேசிய நண்பன்


போர்ட் கிள்ளான் சித்திரா பௌர்ணமி விழா

Posted: 26 Apr 2011 08:21 PM PDT

மூலம் :- மலேசிய நண்பன்


Tiada ulasan:

Catat Ulasan