Selasa, 11 Januari 2011

Charles Santiago

Charles Santiago


போலீஸ் காரர்களால் ஏற்படும் இறப்பின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது – சார்ல்ஸ் சந்தியாகோ சாடினார்.

Posted: 11 Jan 2011 08:47 PM PST

போலிஸ் காரர்களால் ஏற்படும் இறப்பின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது – சார்ல்ஸ் சந்தியாகோ சாடினார்.

போலீஸ் அதிகாரி என்றாலே பாதுகாப்பு தருபவரே ஆகும். ஆனால் இன்றைய நாளை பார்க்கும் போது வேலியே பயிரை மேய்த்தார்ப்போல், போலீஸாரால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது. அதிலும் இளவயதினரும் பள்ளி மாணவர்களும் பலிகடாவாகும் துயர நிலை மேலோங்கி வருகிறது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ வருத்தம் தெரிவித்தார்.

குகன், குணசேகரன், நொரிஜான் சலே , அமினுள் ரஷித் , கிருஷ்ணன் இன்னும் பல என இப்பட்டியல் அனுமான் வால்ப்போல்  நீடிக் கொண்டே போகிறது. இவர்கள் யாவரும் போலீஸாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்கள்  என நாம் அனைவரும் அறிந்த உண்மையே.

அதிலும் சிலரின் மரணத்தில் மர்மமும் சூதும் மறைந்துள்ளது  என வெட்ட வெளிச்சம் போல் தெரிகிறது.அதிலும் தற்போது இளைஞர்களின் உயிர் சூரையாடப்படுவதை  நினைக்கும் பொது உள்ளம் குமுறுகிறது.

மக்களின் உயிர் விலைமதிப்பற்றது . போலீஸ்  அதிகாரிகள் தவறு செய்தவரையோ அல்லது சந்தேகத்தின் பேரில் கைது செய்யவும் விசாரிக்கவும் முடியும் ஒழிய உயிரை பறிக்கும் உரிமையை கொடுக்கப்படவில்லை.

அதுமட்டுமில்லாது என்.கே.அர்.ஏ (NKRA) போன்ற கொள்கைகளையும் யுக்த்திகளையும் பயன்படுத்தி குற்றச் செயல்களை ஒலிப்பதாக காரணம் காட்டி அப்பாவி மக்களையும் இளையர்களையும் சுட்டுக் கொள்வது எந்த விதத்தில் நியாயமாகும் ? என சார்ல்ஸ் கேள்வி எழுப்பினார்.

போலீஸ் அதிகாரிகள் மக்களின் நண்பனாக இருக்க வேண்டியவர்கள். அவர்களுக்கு உற்ற தோழனாக இருந்து கை கொடுக்க வேண்டியவர்கள். ஆனால் மலேசியாவில் நடந்து வரும்  கொலைகளையும் மரணங்களையும் பார்க்கும் போது தவறு புரியாதவர்கள் கூட பயத்தில் தள்ளாட வேண்டியுள்ளது.

அதுமட்டுமின்றி, விசாரணை பேரிலோ சந்தேகப் பேரிலோ கைதானவர்கள் மட்டுமில்லாது, பாமர மக்களும் தமது உயிருக்கு உத்திரவாதம் இல்லை என்றும் கைதானவர்கள் முழுமையாக வீடு திரும்பும் வரை அவர்களின் குடும்பத்தார் உயிரை கையில் பிடித்துக்  கொண்டு அனலில் இட்ட புழுப்போல் பரிதவிப்பது சங்கடகடமான நிலையாக உள்ளது.

ஆகவே,அதிகாரித்தை கையில் எடுத்துக் கொண்டு துஷ்பிரயோகம் செய்வது தண்டிக்கத்தக்கது என சார்ல்ஸ் சாடினார்.சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும்; அதிகாரத்தை தவறாய் பயன்படுத்தியவர்களை பணி நீக்கம் செய்வது மட்டுமில்லாமல் அவர்கள் மீது தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். அப்படி செய்தாலொழிய இம்மரண எண்ணிக்கையை குறைக்க முடியும் என சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார்.


Tiada ulasan:

Catat Ulasan