Rabu, 23 November 2011

Charles Santiago

Charles Santiago


அமைதி பேரணி சட்ட மசோதா ஜனநாயகத்திற்கும் அடிப்படை மனித உரிமைக்குகும் புறம்பானது – சார்ல்ஸ் கண்டனம்.

Posted: 23 Nov 2011 01:50 AM PST

அண்மையில் தாக்கல் செய்த 2011 ஆம் ஆண்டுக்கான  அமைதி பேரணி சட்ட மசோதா நாட்டின் ஜனநாயகத்திற்கும் ஒரு தனி மனிதனின் அடிப்படை மனித உரிமைக்களுக்கும் புறம்பானதாக உள்ளது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் கருத்துரைத்தார்.

கடந்த செப்டம்பர் மாதம்  பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மக்களின் ஜனநாயக  உரிமைகளுக்கு முன்னணி கொடுக்கும் வகையில் , காவல்துறை சட்டம் 1967-இன் 27-வது பிரிவை அகற்றவுள்ளதாக அறிவித்தார். ஆனால் தற்போது, தாக்கல் செய்த 2011 ஆம் ஆண்டுக்கான  அமைதி பேரணி சட்ட மசோதா அடிப்படை மனித உரிமைகளை தட்டிப் பறிக்கும் வகையில் உள்ளது. அது மட்டுமில்லாது, இந்த சட்ட மசோதா கூட்டம் கூட்டவோ,கருத்தை தெரிவிக்கவோ மற்றும்  பேச்சு உரிமைகள் போன்ற அடிப்படை  ஜனநாயக உரிமைகளை  வேரோடு குழி தோண்டி புதைப்பதுப் போல் உள்ளது.

அந்த மசோதாவில் தெரு ஆட்சேபங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும், கூட்டம் நடத்துவதற்கு முன்  30 நாட்கள்  முன்னரே போலீசிடம் அறிவிப்பு கொடுக்க வேண்டும், ஒரு கூட்டம் கூட்ட சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத பல  விதிமுறைகள் , கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் உட்பட 15 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் சவ அடக்க ஊர்வலம் அல்லது பண்பாட்டு அல்லது சமய நிகழ்வுகள் தவிர மற்ற கூட்டங்களில் பங்கு கொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது என்று உத்தேசிக்கப் பட்டுள்ளன.

அதுமட்டுமில்லாது  திட்டமிடப்பட்ட கூட்டத்துக்கு முன் கூட்டியே போலீசாருக்கு அறிவிப்பு கொடுக்கப்படாமல் இருந்தால் ஏற்பாட்டாளர்களுக்கு 10,000 ரிங்கிட் அபராதமும் கூட்டத்தில்  கைது செய்யப்படுகின்றவர்களுக்கு 20,000 ரிங்கிட் வரையில் அபராதம் வித்திக்கப் படும் எனும் சட்டங்கள் கேட்கவே அசட்டுத்தனமாக உள்ளது என கடுமையாக சாடினார் சார்ல்ஸ்.

இவ்வாறான சட்டங்கள் ஜனநாயகத்திற்கு புறம்பானது மட்டும் அல்ல என கூறிய சார்ல்ஸ்,உண்மையில் சொல்ல போனால், மத்திய அரசாங்கினரிடம் ஏற்பட்டுள்ள பயத்தை சித்தரிக்கின்றது என விளக்கினார். அடுத்த பொதுத் தேர்தலில் அதிகாரத்தை இழந்துவிடுவோம் எனும் அச்சத்தை எதிர்கொள்ள, இந்த பய முருத்தும் சட்டத்தை உருவாக்கி பாமர மக்களை அவர்கள் கைகளுக்குள்ளே வைக்கப் பார்கின்றது என மேலும் அவர் சாடினார்.

இதுபோன்ற மக்களின் ஜனநாயக  உரிமைகளை பறிக்கும் அரசமைப்புக்கு எதிரான சட்டங்கள் அளவுக்கதிகமான அதிகாரத்தை போலீஸ் அதிகாரிகளுக்கும் உள்துறை அமைச்சுக்கும் வழங்கிவிடும். இவ்வாறான சட்டங்கள் ஜனநாயகத்திற்கு ஒரு பொது வலி விடப் போவதில்லை என மிக தெளிவாகத் தெரிகின்றது.

எவ்வளவுதான் பிரதமரும் மத்திய அரசாங்கமும் மக்களுக்கு நாங்கள் உதவுகிறோம் என முழக்கம் போட்டு நாடகம் நடத்தி வந்தாலும், இந்த அமைதி பேரணி சட்ட மசோதா ஒன்றே போதும், அவர்கள் நடத்தம் நாடகத்தை வெளிச்சம் போட்டுக் காட்ட. அடுத்த பொதுத் தேர்தலில் ஜெயிக்க மத்திய அரசாங்கம் போடும் நாடகத்தை மக்கள் உணர வேண்டும். குறிப்பாக நமது இந்தியர்கள் விழிப்படைய வேண்டும்.இன்று நாம் அமைதி காத்தோமானால், கூடிய விரைவில் மத்திய அரசாங்கத்தின் கோரப் பிடியில் சிக்கி அவதியுற நேரிடும். உங்கள் உரிமையை இன்றே தட்டிக் கேளுங்கள். நமது வருங்கால சமுதாயம் தழைக்க நாம் போராட ஆயுத்தமாகியே ஆகா வேண்டும் என கேட்டுக் கொண்டார் சார்ல்ஸ்.



Tiada ulasan:

Catat Ulasan