Sabtu, 12 November 2011

Charles Santiago

Charles Santiago


வெற்று வாக்குறுதிகளை கண்டு ஏமாந்தது போதும், இனியும் ஏமாறக் கூடாது – சார்ல்ஸ் வேண்டுகோள்

Posted: 11 Nov 2011 10:31 PM PST

ஒன்றாய் கூடுவோம், பிரச்சனையை தீர்ப்போம் என அழைப்பு விடுத்துள்ளார் சுவா. ஆனால் 53 ஆண்டுகலாமாக இந்தியர்கள் மற்றும் சீனர்களின் பிரதிநிதியாய் மசிசா மற்றும்  மஇகா என இவ்விரு கட்சிகள் இருந்தும் ஏன் நீண்டுக் கொண்டிருக்கும்  பல பிரச்சனைகள் தீர்க்கப் படாமல் இருக்கிறன? இத்துணை வருடம் மக்களின் பிரச்சனை கண்களுக்கு தென்படவில்லையா? அல்லது பிரச்சனைகளை கண்டும் காணாமல் இருந்தீர்களா? என வினாக்களை அடுக்கடுக்காய் தொடுத்தார் கிள்ளான் பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.

அண்மையில் மசிசா  தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்,அரசாங்கத்துடன் தங்கள் செல்வாக்கிற்கு அதிகாரத்தை வலுப்படுத்த தே.முன்னணியில்  உள்ள அவரது கட்சி மற்றும் இந்திய தளமாக கொண்ட அரசியல் கட்சிகளுக்கும்  இடையே ஒரு “ஸ்மார்ட் கூட்டணி” என்று உருவமைக்க அழைப்பு விடுத்துள்ளதை தொடர்ந்து  இந்த “ஸ்மார்ட் கூட்டணி” இந்தியர்களின் பிரச்சனைகளை தீர்த்து விடுமா? என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார் அவர்.

இன்று மலேசிய  இந்தியர்கள் எதிர் நோக்கும் பிரச்சனைகள் நேற்று மழையில் முளைத்த காளான்கள் போல் அல்ல. அவை அன்று காலம் தொட்டு இன்று வரை தீரா பிரச்சனையாக இருந்து வருகிறன. ஆனால், இதுநாள்  வரையிலும் இந்தியர்கள் மற்றும் சீனர்களின் பிரதிநிதிகள் என கூப்பாடு கூவிக் கொண்டிருக்கும் இந்திய மற்றும் சீன  தலைவர்கள் ஆளுங்கட்சியின் முன் கூனிக் குறுகி அமைதி காத்து பிரச்சனைகள் நீண்டதுதான் மிச்சம். இன்னும் சொல்ல போனால் இந்தியர்  மற்றும் சீன சமூதாயத்தினர்  எதிர்நோக்கும் வேலையில்லா திண்டாட்டம், வறுமை, வறுமைகோட்டிற்கு கீழ் வருமானம், கல்வி கடனுதவி பெற திண்டாட்டம், வீடு , நிலம்  வாங்குவதில் சிக்கல், பிறப்புப் பத்திரம் , அடையாள அட்டை மற்றும் குடியுரிமை பெறுவதில் அவதி, பொருளாதார வீழ்ச்சி என பல பிரச்சனைகளுக்கு  விந்தே தே.மு-அம்னோ கீழ் இருக்கும் இந்த இரு கட்சிகள்தான் தான் என வன்மையாக சாடினார் சார்ல்ஸ்.

தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் இக்காலக் கட்டத்தில் ஒன்றாய் கூடுவோம், நன்மையை உருவாக்குவோம் எனும் பாசாங்குக்கெல்லாம் இனியும் மக்கள் ஏமாறப் போவதில்லை. வெற்று வாக்குறுதிகளை அள்ளி வீசி தே.மு – அம்னோ அரசாங்கத்திடம் கொட்ட கொட்ட தலை குனிந்து இந்தியர் மற்றும்  சீனர் மானத்தையும் மரியாதையையும் உரிமையையும் விட்டுக் கொடுக்கும் தலைவர்கள் இனியும் நமக்குத் தேவைதானா என கேள்வி எழுப்பிய சார்ல்ஸ் தே.மு – அம்னோ அரசாங்கத்தின் கீழ் நாம் அடிமையாய் இருந்து அடிபணிந்து உரிமைகளை விட்டுக் கொடுத்தது போதும். இதற்கெல்லாம் ஒரு முற்றுப் புள்ளி வைத்தாகவேண்டும் என வலியுறுத்தினார்.

கடந்த கால அனுபவங்களை நன்கு ஆராய்ந்து மக்கள் செயல் பட வேண்டும். நாங்கள் ஏமாந்தவர்கள் அல்ல என அடுத்த பொதுத் தேர்தலில் சாதித்துக் காட்ட வேண்டும். மக்களை ஏமாற்றும் தலைவர்களுக்கு நல்ல ஒரு பாடம் கற்பிக்க வேண்டும். அது மக்களின் முக்கியமாக இந்தியர்களின் கரங்களில் தான் உள்ளது. மக்கள் சக்தி மகத்தான சக்தி. மாற்றமே மிக பெரிய வெற்றி என உரக்க கூறினார் சார்ல்ஸ்.


Tiada ulasan:

Catat Ulasan