Pengikut

Charles Santiago

Posted by : Unknown | Selasa, 7 Jun 2011 | Published in

sumber :-

Charles Santiago


இந்தியர்கள் பொருளாதார ரீதியில் வளர வியாபாரத்தில் ஈடுபட வேண்டும், சார்ல்ஸ் சந்தியாகோ

Posted: 07 Jun 2011 10:28 PM PDT

8 Jun  மலேசியாஇன்று

இந்தியர்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடைய வேண்டும். அதற்குச் சிறந்த வழி வியாபாரம்தான் என அறிவுறுத்திய சார்ல்ஸ், அது சிறு வியாபாரமாக இருந்தாலும் சரி முயற்சியும் உழைப்பும் மிக மிக முக்கியம் என கூறினார்.

நேற்று காலை 9.30 மணியளவில் தாமான் பண்டாமாரன் பெர்மையில் ஒரு கடை திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சார்ல்ஸ் இவ்வாறு கூறினார்.

மேலும் இவ்வாறான வியாபாரங்களை அவர் ஆதரிப்பதாகவும் இது இந்தியர்களின் ஆர்வத்தை மெருகூட்ட ஏதுவாக இருக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

"அதிலும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாய் ஒரு வியாபாரம் செய்வது நல்ல விஷயமாகும். சுய தொழில் செய்து வாழ்கையில் முன்னேற்ற வேண்டும் என துடிக்கும் இந்தக் குடும்பத்தினருக்கு மக்கள் தங்களது வற்றாத ஆதரவை வழங்க வேண்டும் என சார்ல்ஸ் சந்தியாகோ கேட்டுக் கொண்டார்.

"இவ்வாறு நமக்குள்ளே நாம் உதவி செய்துக் கொண்டால்தான் நாமும் நமது இந்திய சமூகமும் முன்னேறுவது சுலபமாக இருக்கும். நமது இந்தியர்கள் சுயமாக வியாபாரம் செய்ய முன்வந்தாலேபோதும், மலேசியாவில் இந்திய சமூகத்தின் பொருளாதார நிலை 1.6 விழுக்காட்டிலிருந்து மேலும் உயர வழி வகுக்கும். பொருளாதார ரீதியில் உயர்நிலை பெறவும் நமது வறுமையிலிருந்து விடுபடவும் வழி பிறக்கும்". என்றார்  சார்ல்ஸ்


LOOKING FOR A MISSING PERSON!

Posted: 07 Jun 2011 10:12 PM PDT

Source: Sin Chew

 


Ahli Parlimen Klang,YB Charles Santiago dan Ahli Majlis MPK Encik Nallan telah mengadakan satu lawatan tapak di Jalan Banting Pandamaran ke Pandamar Suria bahawa Jalan Raya ini dalam keadaan yang yang sangat serius. Kebanyakan tempat telah berlubang dan tidak rata. Dalam masa 3 bulan, sebanyak 3 orang telah mengalami kemalangan dan kematian disebabkan kerosakan Jalan Raya. Manakalan beberapa kenderaan mereka telah rosak.

Posted: 07 Jun 2011 08:43 PM PDT

Source: Nan Yang San Pau

 


Ahli Parlimen Klang,YB Charles Santiago dan Ahli Majlis MPK Encik Nallan telah mengadakan satu lawatan tapak di Jalan Banting Pandamaran ke Pandamar Suria bahawa Jalan Raya ini dalam keadaan yang yang sangat serius. Kebanyakan tempat telah berlubang dan tidak rata. Dalam masa 3 bulan, sebanyak 3 orang telah mengalami kemalangan dan kematian disebabkan kerosakan Jalan Raya. Manakalan beberapa orang tercedera dan kenderaan mereka telah rosak.

Posted: 07 Jun 2011 08:35 PM PDT

Source: Nan Yang san pau

 


BENGKEL MEMPELAJARI TEKNIK MERAKAM VIDEO

Posted: 07 Jun 2011 08:17 PM PDT


கொள்கைகளை உருவாக்கி மக்களை ஏமாற்றுகின்றனர் : சார்ல்ஸ் சந்தியாகோ

Posted: 07 Jun 2011 07:39 PM PDT

மூலம் :- செம்பருத்தி

Tuesday, June 7, 2011 7:00 pm

அரசாங்கத்தின் கொள்கையாலும் திட்டத்தாலும் பல சுமைகளை சுமந்து கொண்டிருக்கும் மலேசியர்கள் மீது அரசு உதவிப் பணத் தொகை கழிவு, எரிவாயுவின் விலை ஏற்றம், மின்சக்தி கட்டண வீதம் ஏற்றம், அத்தியாவசிய உணவு மற்றும் பொருட்களின் விலை ஏற்றம்  என அரசாங்கம் மேலும் மேலும் சுமைகளை சுமத்துகிறது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ சாடினார்.

தே.மு அரசாங்கம் அரச உதவிப் பண தொகைக் கழிவை நன்கு பரிசீலனை செய்து நியாயமானதாக வழங்கியுள்ளது என கூறினாலும், இங்கு எழும் கேள்வியே, அவர்கள் போட்ட திட்டம் தோல்விக் கண்டதால் ஏன் அதில் விளைந்த பணச் சுமையை வலுக்கட்டாயமாக பாமர மக்கள் சுமக்க வேண்டும் என்பதேயாகும் என அவர் வினவினார்.

மின்சக்தி கட்டண வீதத்தின் உயர்வினால் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகின்றனர், ஏழைகள் மேலும் ஏழையாகயாகின்றனர் என சாடிய சார்ல்ஸ், சக்தி உற்பத்தி துறையில் பிரபல வர்த்தகர்களான ஆனந்தக் கிருஷ்ணன், ஷ்யேட் மொக்தார் அல்புக்காரி மற்றும் பிரான்சிஸ் யோ ஆகியர்கள் ரிம 19  பில்லியன் அரச உதவிப் பணத் தொகையை தொடர்ந்து பெற்றுக் கொண்டிருப்பார் எனவும் சுட்டிக் காட்டினார். ஆனால் பாமர மக்கள் பெறுவதோ வெறும் சுமைதான். கடந்த புதன்கிழமை தொடங்கி மின்சக்தி கட்ட வீதம் 7.12% உயர்வுக் கண்டுள்ளது. இது மலேசியர்கள் பெரும் அளவிலான பணவீக்கத்தை எதிர்நோக்கியுள்ளனர் என்பதனை காட்டுகிறது.

இது ஒரு புறமிருக்க இயற்கை எரிவாயுவின் விலையோ ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒரு மில்லியன் மெட்ரிக் பி.தி.யு-விற்கு ரிம 3.00 என ௦௦ ஏறிக் கொண்டே வருகிறது. இதனை தொடர்ந்து வர்த்தக வாகனங்கள் அடங்கிய மொத்தம் 9 வகை வாகனங்களுக்கு சூப்பர் அல்லது அற்புதமான அரச உதவித் தொகையும் அரசாங்கம் அகற்ற உள்ளது என அவர் நினைவுறுத்தினார்.

இவ்வாண்டு டிசம்பர் தொடங்கி, ஒரு மாதம் ரிம 20 -க்கும் குறைவாகவே மின்சக்தி பயன்படுத்துவோர் பாதிப்படையக் கூடும். மொத்தம் 900,000 பயனீட்டாளர்கள் இப்பிரிவில் அடங்குவர் என விளக்கிய சார்ல்ஸ் இந்த உதவிப் பண தொகை கழிவும், மின்சக்தி கட்டண வீதம் உயர்வினாலும் இரட்டை உதவித் தொகையை குறைக்கவும், வீண் செலவுகளை கட்டுப்படுத்தவும் முடியும் என அறிவித்திருக்கும் அரசாங்கம் ஏன் சுயேட்சை சக்தி உற்பத்தியாளர்கள் எனும் ஐபிபி-க்கும் அவர்களது கூட்டணிக்கும் வழங்கும் ரிம 19 மில்லியனை மீட்டுக் கொள்ள மறுக்கிறது என கேள்வி எழுப்பிய சார்லஸ், அரசாங்கத்தின் கொள்கையினாலும் தந்திரத்தாலும் பலியாகுவது மக்களே என சொன்னார்.

எவ்வளவுத்தான் தே.மு அரசாங்கமும் பிரதமரும் மக்களுக்கு முன்னுரிமை என முழக்கம் போட்டுக் கொண்டிருந்தாலும் உண்மையில் அவர்களும் அவர்களது கூட்டணியும் வளமும் செல்வமும் பெறவே அவ்வாறான கொள்கையை உருவாக்கி மக்களை ஏமாற்றுகின்றனர் என மிகத் தெளிவாகிறது என அவர் மேலும் கூறினார்.

அரசாங்கம் என்பது மக்களின் தேவை அறிந்து, பிரச்சனையை தீர்த்து, சுமையை குறைக்க வேண்டுமே தவிர, சுமையை மேலும் மேலும் கூட்டுவதல்ல ஆகவே, மக்களின் மீது சுமையை திணிக்கும் அரசாங்கம் நமக்குத் தேவைதானா? என மக்கள் சிந்தித்து சீர் தூக்கிப் பார்க்க வேண்டும் என ஜ.செ.க உறுப்பினருமான சார்ல்ஸ் கேட்டுக் கொண்டார்.

 

Dumplings festival event organised by the Klang MP, YB Charles Santiago together with Persatuan Penduduk Bandar Bukit Tinggi (PPBBT) Ahli-Ahli Majlis MPK &

Posted: 07 Jun 2011 04:41 AM PDT

(0) Comments

Leave a Response

Sayap Parti