Pengikut

Charles Santiago

Posted by : Unknown | Isnin, 30 Mei 2011 | Published in

sumber :-

Charles Santiago


சிறு தொழில் செய்பவர்களுக்கு வட்டி இல்லாக் கடன் அளித்தால், மக்கள் முன்னேறுவதற்கான வாய்ப்பு பிரகாசமடையும், சார்ல்ஸ் சந்தியாகோ

Posted: 30 May 2011 09:53 PM PDT

மூலம் :- மலேசியா இன்று 31 May

 கிள்ளான் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். அவர்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும். அதற்குச் சொந்தத் தொழில் செய்வது முக்கியம் என்பதால் அவர்களுக்கு உதவும் நோக்கத்தில் மே 29 -இல் சிலாங்கூர் நகர்புற ஏழை மக்களுக்காக மைக்ரோ கிரெடிட் (சிறிய கடனுதவி) ஏற்பாடு செய்யப்பட்டதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.
 
சிறு வியாபாரம் செய்ய ஆர்வமுள்ளோர் அனைவரும் சிறு பண உதவியை எதிர்பார்த்து திரண்டு வந்திருந்தது மனதுக்கு மிக மகிழ்ச்சியாக இருந்தது எனக் கூறிய சார்ல்ஸ், தலா 130 பேர்கள் இப்பட்டறையில் கலந்து கொண்டு பிரமிக்க செய்து விட்டனர் எனக் கூறினார்.
 
இப்பட்டறையில் கலந்து கொண்டவர்கள் ஏதேனும் ஒரு சிறு வியாபாரத்தை தொடங்க வேண்டும் அல்லது ஏற்கனவே செய்துக் கொண்டிருக்கும் வியாபாரத்தை விரத்தியடையச் செய்ய வேண்டும் என்பதற்காக பண உதவியை நாடி வந்திருந்தனர்.
 
இவர்களுக்கு உதவும் வகையில் கடனுதவிகளை அரசாங்கம் வழங்கினால் கட்டாயம் இம்மக்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என நம்பிக்கை தெரிவித்த சார்ல்ஸ், இது ஏழ்மை நிலையில் உள்ள மக்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு எனவும் கூறினார்.
 
குறிப்பாக, மலேசியாவில் இந்தியர்களின் பொருளாதாரம் கடந்த பத்து வருட காலமாக தேக்க நிலையிலே உள்ளது. தற்போது 1.6 விழுக்காட்டில் இருக்கும் இந்தியர்களின் பொருளாதார நிலையை மேலும் உயர்த்த இது ஒரு பொன்னான வாய்ப்பு. அதுமட்டுமின்றி, வறுமையில் தவிக்கும் குடும்பங்களும், தனித்து வாழும் தாய்மார்களும், நடுத்தர வருமானம் பெரும் குடும்பத்தினர்களும் ஏழ்மையிலிருந்து மீட்சி பெறவும் இவ்வாய்ப்பு வழிவகுக்கும். இதனால் இந்தியர்களின் பொருளாதார நிலை மேலும் உயர ஏதுவாக இருக்கும் என்றார் சார்ல்ஸ்.
 
இப்பட்டறையை வழிநடத்திய நோராயின் மலேசியாவில் இவ்வாறு சிறு தொழில் செய்பவர்களுக்கு வட்டி இல்லாக் கடன் உதவி வழங்குவது இதுவே முதல் முறை எனக் கூறினார்.  சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் இந்த முயற்சியையும் கொள்கையையும் தாம் பாராட்டுவதாக தெரிவித்தார்.
 
எதிர்பார்த்த அளவிற்கு மேலாக மிக அதிகமாகவே வரவேற்பு கிடைத்ததால், மேலும் இதே பட்டறையை மறுமுறையும் செய்ய எண்ணம் கொண்டுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர்களும் ஜசெக உறுப்பினருமான சார்ல்ஸ் சந்தியாகோவும் கூறினர். இம்முறை இப்பட்டறையில் கலந்து கொள்ள இயலாதவர்கள் அடுத்தமுறை தாராளமாக கலந்து கொள்ளலாம் எனவும் அவர் கூறினார்.
 
மேலும், "மக்கள் நன்மைக்காகவும் அவர்களது மேம்பாட்டிற்காகவும்  சிலாங்கூர் மாநில அரசாங்கம் அயராது உழைத்து வருகிறது. ஆகவே, மக்களது ஆதரவு என்றும் மக்கள் கூட்டணிக்கு தொடர்ந்து கிடைத்தால்தான் மேலும் பல விதத்தில் பல நன்மைகளை அடைய முடியும்", என வலியுறுத்தினார் சார்ல்ஸ்.


சுகாதாரமான வாழ்க்கை முறைக்கு யோகா பயிற்சி – சார்ல்ஸ்

Posted: 30 May 2011 09:46 PM PDT

மூலம் :-  செம்பருத்தி

Tuesday, May 31, 2011 2:18 aM

யோகா பயிற்சி செய்து வந்தால் நமது உடல் நலத்தை நாம் நன்றாக பாதுகாக்க முடியும் என்பதோடு வளமான மற்றும் சுகாதாரமான வாழ்க்கை முறைக்கு யோகா பயிற்சி வழிவகுக்கும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோவின் ஏற்பாட்டில் கடந்த 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, 'உடல் சக்திக்கு இயற்கை ரகசியம்' எனும் தொனிப்பொருளில் ஒரு நாள் இலவச யோகா பயிற்சி புக்கிட் திங்கி விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது.

பரபரப்பாய் காலம் ஓடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நமது உடல் நிலையை கவனிக்காமல் இருந்து விடுவதால் பல நோய்களுக்கு நாம் ஆளாகிறோம். அதன் பின் மருத்துவத்திற்கே நாம் சம்பாதிக்கும் பணம் செலாவாகிறது.

ஆனால் இப்பிரச்சனையை தீர்க்க சிறந்த ஒரே வழி யோகா பயிற்சிதான் என கூறிய சார்ல்ஸ், யோகா பயிற்சிகளை நாம் அன்றாட வாழ்க்கையில் செய்ய வேண்டிய ஒன்று என சொன்னார்.

இந்த விழிப்புணர்வை தூண்டும் வகையில் ஏற்பாடு செய்திருந்த இந்த இலவச பயிற்சி இளையோர்களை அதிகம் கவர வைத்திருந்தது. அவர்களின் இந்த ஆர்வமும் பெற்றோர்களின் ஊக்கமும் பாராட்டுத்தக்கது என்று அவர் கூறினார்.

செந்தோசாவில் யோகா வகுப்புகளை நடத்தி வரும் யோகா சிரோமணி திருமதி மேகலா அவர்களோடு இணைந்து மக்களிடையே யோகா பயிற்சியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக இந்த ஒரு நாள் பயிற்சி நடத்தப்பட்டதாக கூறிய சார்ல்ஸ் செந்தோசாவில் இயங்கிவரும் யோகா பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயனடைய விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம் என்று கூறினார்.

யோகா சிரோமணி திருமதி மேகலா-016 3269261


இப்ராஹிம் வலை வீசுகிறார் – சார்ல்ஸ் சந்தியாகோ

Posted: 30 May 2011 09:22 PM PDT

மூலம் :- மலேசிய நண்பன்


PERTANDINGAN MEMBUAT BAH CHANG&PERTANDINGAN MEWARNA UNTUK KANAK-KANAK BERUMUR 4-7 TAHUN

Posted: 30 May 2011 04:36 AM PDT

Sourcec: Sin Chcew

 


查爾斯:以民為本‧“調電費應檢討3問題”

Posted: 30 May 2011 04:23 AM PDT

Source: Sin Chew

 

(雪蘭莪‧巴生29日訊)巴生國會議員查爾斯說,中央政府理應以民為本,在宣佈調整電費之前,先厘清以下3項重點。

他說,第一項,政府每年津貼190億令吉予獨立發電廠,是一項對國人不公平的津貼政策。

"第二項,政府每年發放予獨立發電廠20至22%的投資回酬,這項回酬過於豐厚,因此有必要檢討。"

他說,根據合約,無論獨立發電廠發電多寡,國能都需一律接受,導致目前儲備電多出逾40%;因此,第三項就是檢討這項合約,國能只需接受所需的發電量。

查爾斯說,只要政府肯針對這三項問題作出檢討,就能節省開支,屆時根本無需調高電費。

他說,這些都是"不平等"合約,只會富了有關公司,但卻窮了人民,因此作為一個以民為本的政府,有必要對此作出檢討。


(0) Comments

Leave a Response

Sayap Parti