Rabu, 18 Mei 2011

Charles Santiago

Charles Santiago


Santiago: Subsidise the poor to help them cope

Posted: 18 May 2011 10:58 PM PDT

Source: Selangor Times


這棟組屋每一層樓的走廊圍欄都已受損或遭破壞,若小孩玩樂時不慎墜下,後果不敢想像。右二起市議員納南、楊文來、查爾斯與阿布。

Posted: 18 May 2011 10:53 PM PDT

Source: Selangor Times


சிறுமி அனுஷா சித்ரவதை: குற்றவாளியைச் சட்டம் தண்டித்தாக வேண்டும் – சார்ல்ஸ் சந்தியாகோ

Posted: 17 May 2011 11:40 PM PDT

மூலம் :- மலேசியா இன்று

13 May | செய்தி.

அண்மையில் பாதுகாவலரால் சித்ரவதை செய்யப் பட்ட 13 வயது சிறுமி அனுஷாவின் பாட்டியான லீலாவதி காளிமுத்து நேற்று மாலை (வியாழக்கிழமை) தமது அலுவலகத்தில் கண்ணீர் கம்பலையுமாய் தனது பேத்தியின் நிலையைப் பற்றிய மனவேதனையைக் கொட்டித் தீர்த்தார் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

சிறுமி அனுஷாவின் பெற்றோர் கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரது நான்காவது வயதிலேயே பிரிந்து விட்டதாகவும், அதற்குப் பிறகு பன்னிரண்டு வயது வரை தனது பாதுகாப்பில்தான் அனுஷா இருந்ததாகவும் பாட்டி லீலாவதி கூறினார்.

இவ்வாறு விளக்கமளிக்கையில், தனது மகனும் அனுஷாவின் தந்தையுமான சேகரன் கேட்டுகொண்டதுக்கிணங்க, அனுஷாவை அவரிடம் அனுப்பி விட்டதாகவும் கூறிய லீலாவதி, அனுப்பி நான்கு மாதம் கூட ஆகவில்லை, ஆனால் இப்படி கொடூரமாக சித்ரவதை செய்யப் பட்டிருப்பதை சொல்லி மலை மலையாய் கண்ணீர் துளியைச் சிந்தினார்.

பிள்ளைகள் எவ்வளவுதான் தவறுகள் செய்திருந்தாலும் அவர்களை கடுமையான முறையில் அடிப்பதோ அல்லது புண்படுத்தும் அதிகாரமோ பெற்றோர்களுக்கு இல்லை என கூறிய சார்ல்ஸ், உண்மையில் சொல்லப் போனால் அவர்களது மீது எந்த ஒரு புண்ணும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளவதும் பிள்ளைகளைச் சுகாதாரமாக வளர்ப்பது பெற்றோர்களின் தலையாய கடமையாகும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இவ்வாறு மனிதாபிமானம் இல்லாமல் கொடுமை படுத்துபவர் யாராகினும் எந்த ஒரு பாரபட்சமுமின்றி தண்டனை பெற்றே ஆக வேண்டும் என வலியுறுத்திய சார்ல்ஸ், அனுஷாவுக்கு தற்போது பாதுகாப்பும் அரவணைப்பும் மிக முக்கியம் என ஆலோசனைக் கூறினார்.

அதுமட்டுமின்றி, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும், தம்மால் முடிந்த வரையில் சட்டபூர்வமாக உதவிகள் வழங்கத் தயார் எனவும் சார்ல்ஸ் கூறினார்.


Tiada ulasan:

Catat Ulasan