Charles Santiago |
Posted: 12 May 2011 08:08 AM PDT மூலம் :- மலேசிய இன்று 11 May | செய்தி. அண்மையில் கிள்ளான் துங்கு அம்புவான் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் 13 வயது சிறுமியின் நிலையைப் பார்க்கும்போது உள்ளம் குமுறுகின்றது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ தமது வருத்தத்தை தெரிவித்தார். இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் ஆவர்.அவர்களுக்கு நல்ல படிப்பறிவும் பகுத்தறிவும் கொடுத்து, நற்பண்புகளை ஊட்டி, நல்லொழுக்கத்துடன் வளர்த்தால்தான் நாட்டிற்கு நல்ல குடிமகன்களையும் நல்ல தலைவர்களையும் உருவாக்க முடியும். ஆனால் தற்போது பிள்ளைகளும் பள்ளி பருவ மாணவர்களும் சித்ரவதை செய்யப்படும் செய்திகளே அதிகமாகிக் கொண்டு வருவது மனதுக்கு வேதனையாக உள்ளது என்றார் அவர். "வேலியே பயிரை மேய்வதுபோல், பாதுகாக்க வேண்டிய பெற்றோர்களும் பாதுகாவலர்களும் சிறார்களைக் கொடுமைப்படுத்துவதும் சித்ரவதை செய்வதும் சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாத செயல் என கூறிய சார்ல்ஸ், இவ்வாறு செய்பவர்களை சட்டம் கட்டாயம் தண்டித்தாக வேண்டும்" எனவும் கேட்டுக் கொண்டார். சிறார்கள் சித்ரவதை அதிகரித்து வருவது குடும்ப உறுப்பினரிடையே உள்ள உறவு, அன்பு என்ற அடித்தளத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதை மிகத் தெளிவாக காட்டுகிறது. குடும்ப ஒற்றுமையும் பாசமும் நாளுக்கு நாள் குறைந்துக் கொண்டே வருகிறது என எச்சரித்த சார்ல்ஸ், "குடும்பம் ஒரு பல்கலைக்கழகம்" என்பதை வலியுறுத்தினார். அன்பு, பாசம், உறவு, மகிழ்ச்சி, துக்கம், அழுகை என எல்லா அம்சங்களும் அடங்கிய ஓர் அழகான கலவைதான் குடும்பம். இப்படி சிறார்களை கொடுமை செய்வதன் மூலம் எந்தவொரு பயனும் விளையப் போவதில்லை என்றாரவர். தன் அரவணைப்பில் வாழும் பிள்ளைகளுக்கு தகுந்த படிப்பை வழங்குவது மட்டுமில்லாமல் அப்பிள்ளைகளின் உரிமைகளும் காக்கப் படவேண்டும். ஆரோக்கியமாகவும் ஆக்ககரமாகவும் செயல்படும் வகையில் பிள்ளைகளை வளர்ப்பது பெற்றோர்களின் தலையாய கடமையாகும் என்பதை அவர் வலியுறுத்தினார். பெற்றோர்களுக்காக விழிப்புணர்வு கருத்தரங்குகள், பிள்ளைகளின் உரிமைகள், பெற்றோர்களின் கடமையும் பங்கும், குடும்ப ஒற்றுமையும் சுபிட்சத்தின் முக்கியத்துவம் என பல கோணங்களில் அவர்களுக்கு பயற்சிகள் வழங்க வேண்டும். பெற்றோர்களுக்கு மட்டுமில்லாது பிள்ளைகளுக்கும் அவர்களது உரிமையைப் பற்றிய விவரங்களை எடுத்துரைக்க வேண்டும். எப்போது மக்களிடையே விழிப்புணர்வு மேலோங்கி நிற்கிறதோ, அப்போதுதான் இவ்வாறான குற்றச்செயல்கள் குறைய ஆரம்பிக்கும். "ஆகவே, குற்றச்செயல்களைக் குறைக்க எண்ணம் கொண்டிருக்கும் அரசாங்கம் மக்களிடையே விழிப்புணர்வுத் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டும் என சார்ல்ஸ் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார். |
அணு ஆயுதம் இல்லா சூழ்நிலை வேண்டும் – சார்ல்ஸ் சந்தியாகோ பேச்சு Posted: 12 May 2011 07:49 AM PDT |
You are subscribed to email updates from Charles Santiago To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Tiada ulasan:
Catat Ulasan