Rabu, 27 April 2011

Charles Santiago

Charles Santiago


Minimum Wage Round-table

Posted: 27 Apr 2011 02:11 AM PDT

Minimum Wage Round-table -In conjunction with Labour Day

Klang MP Charles Santiago is convening a round table on minimum wages. 

       Areas of discussion include:   

a) living vs. poverty minimum wages

      b) role and scope of wage council

         c) transitional measures

  Participants include: academics, trade unionists, NGOs, employers, members of parliament and ADUNs

Date: Friday, 29th April, 2011

Time: 9am-Noon.

Venue: Bilik Bunga Mawar Tingkat 1 Ibu pejabat MBPJ Jalan Yoong Shook Lin Petaling Jaya (building next to Dewan Sivik)

Please call Raj for more info: 0166045390


Bengkel Hak Wanita& Keganasan dalam rumah tangga

Posted: 27 Apr 2011 12:37 AM PDT

மே தினக் கொண்டாட்டத்தோடு சம்பள உயர்வும் தேவை, சார்ல்ஸ் சந்தியாகோ

Posted: 27 Apr 2011 12:30 AM PDT

மூலம் :- மலேசியா இன்று 27 Apr

"மே தினம் கொண்டாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த மே தின வாழ்த்துகள்" என வாழ்த்துகள் கூறினார் டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.
 
ஒவ்வொரு வருடமும் மலேசியர்கள் அனைவரும் மே 1 ஆம் தேதியயை தொழிலாளர் தினமாக கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் அயராது உழைக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மே 1 இல் பொது விடுமுறை அளிக்க வேண்டும். அப்படி விடுமுறை அளிக்காத முதலாளிகள் தொழிலாளர்களுக்கு மும்மடங்கு சம்பளம் தர வேண்டும் என தொழிலாளர் சட்டம் கூறுகிறது என்றாரவர்.
 
மேலும், தற்போது நிலவி வரும் சம்பளப் பிரச்சனையைத் தீர்க்காமல் இருப்பதுதான் மனதுக்கு வேதனையாக இருக்கிறது என சார்ல்ஸ் சந்தியாகோ வருத்தம் தெரிவித்தார்.

தொழிலாளர்களின் சம்பள உயர்வு மிக வேதனைக்குரிய நிலையில் உள்ளது எனக் கூறிய சார்ல்ஸ், கடந்த பத்தாண்டுகளில் தொழிலாளர்களின் சம்பளம் 2.6 விழுக்காடுதான் உயர்ந்துள்ளது. ஆனால் அதே காலகட்டத்தில் விலைவாசியோ 34 விழுக்காடு அதிகரித்துள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
 
தொழிலாளர்களின் அடிப்படை சம்பளத்தை அரசாங்கம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரப்பட்டு வருகிறது. ஆனால் இன்னமும் அது உயர்த்தப்படாமல்தான் இருக்கிறது என்பதை அவர் மேலும் சுட்டிக் காட்டினார்.
 
தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் வறுமைக் கோட்டிற்கு மேல் இருத்தல் வேண்டும். தற்போதைய விலைவாசிகளையும் வாழ்க்கை செலவுகளையும் சமாளிக்கும் வகையில் அவர்களுக்குச் சம்பளம் வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். குறைந்தப‌ட்ச‌ ச‌ம்ப‌ளமாக‌ ரிம‌1500க்கும் மேல் இருத்த‌ல் வேண்டும் என‌வும் சார்ல்ஸ் கேட்டுக் கொண்டார்.
 
"இவ்வாறான‌ ச‌ம்ப‌ள‌த்தை அர‌சாங்க‌ம் நிர்ணயம் செய்தாலே போதும். தொழிலாள‌ர்க‌ளுக்கு ம‌ற்ற‌ற்ற‌ ம‌கிழ்ச்சி ஏற்ப‌டும். இப்ப‌டி அர‌சாங்க‌ம் அறிவிக்காதா என்றுதான் ஏழை ம‌க்க‌ளும் எதிர்ப்பார்க்கின்ற‌ன‌ர். இந்நாள் என்று வ‌ருகிற‌தோ அதுவே தொழிலாள‌ர் கொண்டாடும் உண்மையான‌ மே தினமாக இருக்கும்", என்றார் சார்ல்ஸ்.
 
அதும‌ட்டுமில்லாது உண‌வுப் பொருள்க‌ளின் விலை உய‌ர்வு ஏழை ம‌க்க‌ளை வெகுவாக‌ பாதிக்கின்றது. அதனாலும் தொழிலாள‌ர் இனத்தினர் அதிக‌ அளவில் பாதிக்க‌ப் ப‌டுகின்ற‌ன‌ர். ஏனெனில் அவ‌ர்க‌ள‌து வ‌ருமான‌ம் வ‌றுமைக் கோட்டிற்கும் கீழ் உள்ள‌து என‌ அவர் மேலும் விள‌க்கினார்.

ஆதலால், இந்த‌க் குறைந்த‌ப‌ட்ச‌ அடிப்ப‌டை ச‌ம்ப‌ளத்தை காலம் தாழ்த்தாமல் மிக‌ விரைவில்  நிர்ணையித்து மக்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம்  தீவிரமாக ஆலோசிக்க வேண்டும் என்று சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தினார்.


Tiada ulasan:

Catat Ulasan