Jumaat, 22 April 2011

Charles Santiago

Charles Santiago


கிள்ளானில் அணு உலை கட்டுமானத்திற்கு எதிர்ப்பா? சார்ல்ஸ் சந்தியோகோ விசாரிக்கப்பட்டார்

Posted: 22 Apr 2011 01:13 AM PDT

மூலம் :- மலேசியா இன்று 22 Apr

கிள்ளானில் அணு உலை கட்டுமானத் திட்டத்தை எதிர்த்து கூட்டம் கூட்டியதற்காக டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ மீது காவல் அதிகாரி ஒருவர் புகார் செய்ததைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 3 இல் அக்கூட்டத்தை ஏற்பாடு செய்த சார்ல்ஸ் சந்தியாகோ கிள்ளான் போலீசாரால் விசாரிக்கப்பட்டார்.

கடந்த புதன்கிழமை கிள்ளான் காவல் நிலையத்தில் வாக்குமூலம் அளித்த பின்னர், சார்ல்ஸ் "இது ஜனநாயக நாடு, நமது எண்ணத்தை தெரிவிக்க கூட்டம் நடத்த நமக்கு உரிமை இல்லையா?", என கேள்வி எழுப்பினார்.
 
"இது தனி மனிதனின் அடிப்படை உரிமையாகும். நமக்கு பேசும் சுதந்திரம் உள்ளது. நமது எண்ணத்தை தெரிவிக்க உரிமை உள்ளது. மேலும் சொல்லப் போனால் இவ்வாறான கூட்டத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் என் மீது போலீஸ் நடவடிக்கை எடுப்பது எனது உரிமையையும் கிள்ளான் மக்களின் உரிமையையும் சேர்த்துப் பறிக்கும் முயற்சி", எனக் கூறிய சார்ல்ஸ், "அதே நாளன்று கேப்ஸ் மற்றும் அம்னோ நடத்திய மறியலுக்கு எதிராக எந்த ஒரு போலீஸ் நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாக இருப்பது ஏன்?, என்று வினவினார்.
 
கிள்ளானில் அணு உலை கட்டுமானம் எவ்வளவு ஆபத்து விளைவிக்கும் என்பதைப் பற்றியும் அது எவ்வளவு அபாயகரமானது என்பதைப் பற்றியும் பொது மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய கடப்பாடுள்ள நாடாளுமன்ற உறுப்பினரான ஒருவர் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கியதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட அதே வேளையில், பாலாய் போலீஸ் உத்தாரா காவல் நிலையத்தின் முன் "டத்தோ டி" ஆபாச வீடியோ பற்றி புகார் தாக்கல் செய்ய கூட்டம் கூட்டியவர்கள் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஒரே மலேசியாவின் இரட்டை வேடத்தை மிகத் தெளிவாக காட்டுகிறது என சார்ல்ஸ் சாடினார்.
 
"ஆனாலும், இதற்கெல்லாம் நான் பயப்படப் போவதில்லை. கிள்ளானிலோ, மலேசியாவின் எந்த ஒரு மூலையிலே அணு உலை கட்டக் கூடாது என்பதையும் அது மக்களுக்கு எத்தகைய ஆபத்தைக் கொண்டு வரும் என்பதை பொது மக்களுக்குத் தெரிவிப்பதும் எனது தலையாய கடமையாகும். இது சம்பந்தமாக மக்களிடம் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் எனது முயற்சியும் பணியும் மேலும் தொடரும்", என திட்டவட்டமாக கூறினார் சார்ல்ஸ் சந்தியாகோ


சரவாக் மக்கள் எழுச்சி பெற்றதே மக்கள் கூட்டணியின் மகத்தான வெற்றி: சார்ல்ஸ்

Posted: 21 Apr 2011 11:41 PM PDT

மூலம் :- செம்பருத்தி

Friday, April 22, 2011 11:19 am

சமீபத்தில் நடைபெற்ற சரவாக் மாநில பொதுத் தேர்தலின் முடிவு, சரவாக் மக்கள் எழுச்சி பெற்று விட்டனர் என்பதனை மிகத் தெளிவாகக் காட்டுகிறது. இதுவே மக்கள் கூட்டணிக்கு கிடைத்த மிக மகத்தான வெற்றி என பெருமையாக கூறிக் கொண்டார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.

சரவாக் நகர்ப்புர மற்றும் நாட்டுப்புறம் மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் மக்கள் கூட்டணியை 16 தொகுதிகளில் வெற்றி அடைய செய்துள்ளனர். கடந்த 50 ஆண்டுகளாக அதிகாரத்தைத் தன் பிடிக்குள் வைத்திருந்த தேசிய முன்னணிக்கு இந்த வெற்றி பெரும் மருட்டலாகும் என சார்ல்ஸ் கூறினார்.

தேசிய முன்னணிக்குக் கிடைத்த வாக்கு விகிதம் எட்டு விழுக்காடு சரிந்து 55 விழுக்காடாகியுள்ளது. சரவாக் தேசிய முன்னணியுடைய பாரம்பரியக் கோட்டை எனக் கருதும் போது அந்த வீழ்ச்சி குறிப்பிடத்தக்கதாகும் ஆதலால், இதுவரை சரவாக் தங்களது கோட்டை என மார்தட்டிக் கொண்டிருந்த தேசிய முன்னணிக்கு இனிமேலும் அது அவர்களது கோட்டை இல்லை என்பதை சாதித்துக் காட்டிவிட்டது மக்கள் கூட்டணி என சார்ல்ஸ் சந்தியாகோ பெருமிதம் கொண்டார்.

ஆகவே, சரவாக் மக்களின் எதிர்ப்பார்ப்பே அரசாங்கத்தை மாற்றுவது என தெளிவாகப் புலப்படுகிறது. அவர்கள் விழிப்படைய தொடங்கிவிட்டனர். மாற்றத்தை ஏற்படுத்துவது மக்கள் கையில்தான் உள்ளது என சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.


Maklumat Tidak Telus Isu Lynas

Posted: 21 Apr 2011 11:33 PM PDT


反對雪州不法陣線示威‧查爾斯抨警雙重標準

Posted: 21 Apr 2011 11:29 PM PDT

Souce: Sin Chew


Tiada ulasan:

Catat Ulasan