Selasa, 19 April 2011

Charles Santiago

Charles Santiago


இந்தியர்களின் தீராத பிரச்னைகளுக்கு யார் காரணம்?, சார்ல்ஸ் சந்தியாகோ கேட்கிறார்

Posted: 19 Apr 2011 01:31 AM PDT

மூலம் :- மலேசியா இன்று 19 Apr

மலேசிய சுதந்திரம் அடைந்து 53 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், இந்திய மலேசியர்கள் எதிர்கொண்டுள்ள பல பிரச்னைகளிலிருந்து இன்னும் விடுதலை பெறாமல் இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என்று டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகளின் இந்திய தலைவர்கள் இந்திய சமூகத்திற்காக பரிந்து பேசி போராடுபவர்கள் அல்லர் என மஇகாவின் தேசிய தலைவர் ஜி.பழனிவேல் கூறியிருப்பது இன்னும் பெரிய வேதனைகுரியதாகும் என்றாரவர்.

தேசிய முன்னணி அரசாங்கத்தின் ஓர் அங்கம் மஇகா. ஆனால், கடந்த 53 ஆண்டுக்காலங்களில் மலேசியாவில் பிறந்தும் குடியுரிமை இல்லாமல் அவதிப்படும் இந்தியர்களின் அவலநிலையை அக்கட்சி தீர்த்து வைத்ததா? பிறப்புப் பத்திரம் இருந்தும் அடையாள அட்டை பெற முடியாமல் தவிக்கும் இந்தியர்களின் பிரச்சையை அக்கட்சி தீர்த்து வைத்ததா? தகுந்த கல்வி அறிவு பெற்றிருந்தும் வேலைக்காக அங்கும் இங்கும் அலைந்துக்கொண்டிருக்கும் இந்தியர்களின் பரிதாப நிலையை அக்கட்சி தீர்த்து வைத்ததா? உயர்க்கல்விப் பிரச்னை, கோயில் பிரச்னை, நிலப் பிரச்னை, வீடில்லாத பிரச்னை, வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் இந்தியர்களின் பிரச்னை ஆகிய இத்தனைப் பிரச்னைகளில் ஏதாவது ஒன்றையாவது இந்த ஆளுங்கட்சி தீர்த்து வைத்ததா?, என்று அவர் கேள்விகளை அடிக்கினார்.

இந்தியர்களின் பொருளாதார நிலை இன்னும் கீழ்மட்ட நிலையில்தான் உள்ளது. ஏழை மக்களின் குறைந்தபட்ச சம்பளமே மக்களை வறுமைக்கோட்டிற்கும் கீழ் அழுத்துகிறது. குறைவான ஊதியம், கட்டுப்பாடற்ற விலை ஏற்றம். அரசாங்க உதவித்தொகை கழிப்பு. இவை இந்திய மக்களின் சுமையைக் கூட்டுகிறது. இவற்றுக்கு வழிகாண இக்கட்சி ஏதேனும் செய்துள்ளதா என்று மேலும் அவர் கேட்டார்.

எதிர்க்கட்சி இந்தியத் தலைவர்கள் இந்தியர்களுக்காக கைகொடுக்கவில்லையா? அண்மையில், புக்கிட் ஜாலில் இந்திய மக்களின் பிரச்னைக்கு யார் களம் இறங்கியது? பேராக் மக்களின் நிலம் மற்றும் வீட்டுப் பிரச்னைகளுக்கு எந்தக் கட்சி இந்தியர்கள் கைக்கொடுத்து வருகின்றனர்? சமீபத்தில், ஏற்பட்ட இண்டர்லோக் பிரச்னை. இப்பிரச்னையை உருவாக்கியது அரசாங்கம். அரசாங்கத்தின் ஓர் அங்கம் மஇகா. இப்பிரச்னைக்கு எதிராகக் குரல் கொடுத்து வருவது எந்தக் கட்சி இந்தியர்கள்? இண்டர்லோக் பிரச்னையை உருவாக்கிய அரசாங்கத்தின் ஓர் அங்கமான மஇகா இதனைத் தீர்க்க என்ன செய்ய முடிந்தது என்று அவர் மேலும் வினவினார்.

"இப்போது இந்தியர்களின் முதன்மையான பிரச்னையாக விளங்கும் இண்டர்லோக் நாவலுக்கு எதிராக களம் நான் தயார், நாங்கள் தயார். இந்நாவல் மீட்டுக்கொள்ளப்படும் வரையில் போர்க்கொடி ஏந்த நாங்கள் தயார். மஇகாவிலிருந்து களம் இறங்க எந்தத் தலைவரும் தயாரா?", என்று சார்ல்ஸ் சவால் விடுத்தார்.

"எதிர்க்கட்சி இந்திய தலைவர்களை சாடுவதை நிறுத்திவிட்டு இந்திய மக்களுக்கு நல்லதைச் செய்வதில் அக்கறை காட்ட ஆளுங்கட்சியின் ஓர் அங்கமான மஇகா முன்வர வேண்டும் என்று சார்ல்ஸ் ஆலோசனை கூறினார்.


மலாய்காரர் ஆதிக்கத்தை எதிர்க்க மஇகா முன்வரவேண்டும், சார்ல்ஸ்

Posted: 19 Apr 2011 01:27 AM PDT

மூலம் :- செம்பருத்தி

Tuesday, April 19, 2011 9:14 am

மலேசியா சுதந்திரம் அடைந்து 53 ஆண்டுகள் கடந்த பிறகும் மலேசிய இந்தியர்கள் எதிர்நோக்கும் பல பிரச்னையிலிருந்து இன்னும் சுதந்திரம் பெறாமல் இருப்பது மனதுக்கு மிக வேதனையாக இருக்கிறது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்தார்.

"இந்திய எதிர்கட்சித் தலைவர்கள் இந்திய சமூதாயத்திற்காக பரிந்து பேசி போராடுபவர்கள் அல்லர்" என ம.இ.கா தேசியத் தலைவர் ஜி.பழனிவேல் சாடியிருப்பது மிக வேதனையாக இருக்கிறது.

தே.மு அரசாங்கத்தோடு ம.இ.கா 53 ஆண்டுகள் இருந்து வருகிறது. ஆனால், இந்த 53 ஆண்டுக் காலங்களில் மலேசியாவில் பிறந்தும் குடியுரிமை இல்லாமல் அவதியுறும் இந்திய சமுதாயத்தின் அவல நிலை தீர்ந்ததா? பிறப்புப் பத்திரம் இருந்தும் அடையாள அட்டை பெற முடியாமல் தவிக்கும் நிலை தீர்ந்ததா? மலேசிய இந்தியர்கள் தகுந்த கல்வி தகுதியை பெற்றிருந்தாலும் வேலைக்காக அங்கும் இங்கும் அலைந்து வேலை இல்லாமல் இருக்கும் கஷ்டம் எப்போது தீர்ந்தது?

மேல் கல்வி பிரச்னை, கோவில் பிரச்னை, நிலப் பிரச்னை, வீடு பிரச்னை மற்றும் வறுமை அதற்கு காரணம் வறுமைக் கோட்டிற்கு கீழ் சம்பளம் என இந்தியர்களின் ஏதாவது ஒரு பிரச்னையை ம.இ.கா இதுவரை தீர்த்துள்ளதா? என சார்ல்ஸ் கேள்வியெழுப்பினார்.

இந்தியர்கள் பொருளாதார ரீதியில் இன்னும் கீழ்மட்ட நிலையிலேதான் உள்ளார்கள். பாமர மக்களின் குறைந்தபட்ச சம்பளமே மக்களை வறுமைக்கு இட்டுச் செல்கிறது. குறைவான ஊதியம் ஆனால், விலை ஏற்றம், அரச உதவிப் பண கழிவு என மக்களுக்கு குறிப்பாக இந்தியர்களுக்கு சுமை மேல் சுமையை கொடுத்ததுத்தான் மிச்சம், இதையெல்லாம் தடுக்க ஏதாவது முயற்சி செய்துள்ளனரா? என சந்தியாகோ சாடினார்.

இதுவெல்லாம் போக அண்மையில் நடந்து வரும் புக்கிட் ஜாலில் மக்களின் பிரச்னைக்கு யார் களம் இறங்கியது? பேரா மக்களின் நிலம் மற்றும் வீடு பிரச்னைக்கு எந்த கட்சி இந்தியர்களுக்கு கை கொடுத்து வருகிறது? சமீபத்தில் சர்ச்சைக்குரிய இண்டர்லொக் நாவலுக்கு எதிராக எந்தக் கட்சி இந்தியர்களுக்கு குரல் கொடுத்து வருகிறது? என கேள்வி எழுப்பிய சார்ல்ஸ் இண்டர்லொக் நாவல் விவகாரத்தில் ம.இ.காவால் என்ன செய்ய முடிந்தது எனவும் வினவினார்.

அதுமட்டுமின்றி இந்தியர்களின் முதல் பிரச்னையாக இருக்கும் சர்ச்சைக் குறிய இண்டர்லொக் நாவலுக்கு எதிராக களம் இறங்கி போராட நாங்கள் தயார். இந்நாவலை மீட்டுக் கொள்ளும் வரை போர்க்கொடி ஏந்த நாங்கள் தயார். ஆனால், ம.இ.காவிலிருந்து எந்த இந்திய தலைவர்கள் களம் இறங்க தயார் என சவால் விடுத்தார் சார்ல்ஸ்.

ஆகவே, பழினிவேல், இந்திய எதிர்கட்சி தலைவர்களை சாடுவதை நிறுத்தி விட்டு இந்திய மக்களுக்கு நலன் செய்வதில் மிகுந்த அக்கறைக் காட்ட ம.இ.கா முன்வர வேண்டும் என சார்ல்ஸ கேட்டுக் கொண்டார்.


Tiada ulasan:

Catat Ulasan