Jumaat, 15 April 2011

Charles Santiago

Charles Santiago


எகிப்தில் நடந்த அதே மாற்றத்தை இங்கு சரவாக்கில் ஏற்படுத்த முடியும் !

Posted: 15 Apr 2011 03:05 AM PDT

மூலம் :- செம்பருத்தி

Friday, April 15, 2011 11:50 am

கடந்த 30 ஆண்டு காலமாகச் சரவா மாநில முதலமைச்சராகப் பதவி வகித்து வரும் அப்துல் தாயிப் மாஹ்முட் பதவி விலக வேண்டும் என்றும் அப்பதவிக்கு மற்றவர்களை வழிவிட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் உட்பட பல தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம் சரவா மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் நஜீப் துன் ரசாக் முன்னிலையில் அவர் சுருக்கமாக 'நான் பதவி விலகுவதற்கான நேரம் வரும். அப்போது நிச்சயம் பதவி விலகுவேன்" எனக் கூறி சரவாக் மக்களையும் பிரதமரையும் அதிர்ச்சயடைய செய்துவிட்டார் தாயிப்.

"எனக்கு அடுத்த தலைவரை நான் கண்டுபிடித்துவிட்டேன்" எனவும் தலைமத்துவத்திற்கு வருபவரை இன்றைய தலைமுறைகளாகிய நீங்கள் தான் ஆதரித்து சரவா மாநிலத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும்' என்றும் அவர் கூறியிருக்கிறார். அப்படியானால் இருபது வருடங்காலமாக அவர் எங்கே மறைந்திருந்தார் என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கேள்வி எழுப்பினார்.

இது ஒரு புறமிருக்க பிரதமர் நஜிப் அவர்களோ அப்துல் தாயிப் மாஹ்முட் பதவி விலகுவது நிச்சயம் என பல முறைக் கூறி மக்களை ஏமாற்றி வருகிறார் என சார்ல்ஸ் சாடினார்.

இதிலிருந்து திட்ட வட்டமாகத் தெரியவருவது என்னவென்றால் புத்ராஜெயாவை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக நஜிப் இவ்வாறெல்லாம் கூறி மக்களை திசை திருப்பப் பார்கிறார். உண்மையில் ஆட்சியில் இருக்க விரும்பினால் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். மக்கள் பிரச்சனையை தீர்க்க உழைக்க வேண்டும்.

கடந்த 30 ஆண்டு காலமாக தே.மு அதிகாரத்தில் இருக்கும் சரவாக் மக்களின் நிலை என்ன? அவர்களின் பொருளாதார வீழ்ச்சிக்கும் வறுமைக்கும் யார் காரணம் என்பதை மக்கள் உணர வேண்டும்.

இத்துணைக் காலம் சரவாக் மக்களின் நலன் காக்கப்பட்டதா? ஏன் திடீரென ஸ்ரீ அமான் மருத்துவமனைக்காக ரிம 200 மில்லியன் வழங்கியுள்ளார்? இதை வழங்குகிறேன் அதை வழங்குகிறேன் என நேற்று மட்டுமே ரி.ம 300 மில்லியன் கொடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. அப்படியானால் ஏன் இத்துணைக் காலம் இம்மக்களின் பிரச்சனையைத் தீர்க்கவில்லை? மக்களை கவர்வதற்காக போடும் நாடகமா என சார்லஸ் கேள்வி எழுப்பினார்.

ஆகவே, இவ்வாறு தேர்தல் பிரச்சாரத்தில் மக்களை கவர்வதற்காக தே.மு போடும் வேஷத்தை நம்பி மக்கள் ஏமார்ந்து விடக் கூடாது. மாற்றத்திற்கு தயாராக வேண்டும். எகிப்தில் நடந்த அதே மாற்றத்தை இங்கு மலேசியாவில் சரவாக் மாநிலத்தில் ஏற்படுத்த முடியும். அது மக்கள் கையில்தான் உள்ளது. நாட்டின் தலையெழுத்தையும் ஆட்சியையும் மாற்றும் சக்தி மக்களுக்கே உள்ளது என நம்பிக்கை தெரிவித்தார் சார்ல்ஸ் சந்தியாகோ.


Tiada ulasan:

Catat Ulasan