இண்டர்லோக் நாவலால் பள்ளிக்கூடம் பகைவர் கூடமாகிறது, சார்ல்ஸ் சந்தியாகோ சாடுகிறார் Posted: 08 Mar 2011 06:51 PM PST |
HIV Protesters Tell India to Defy EU Drug Demands Posted: 08 Mar 2011 06:46 PM PST Source : AFP, Published Wednesday, March 02, 2011 Thousands of HIV-positive protesters called on the Indian government on Wednesday to reject EU trade demands they said would make lifesaving drugs unaffordable to millions of people with the virus. More than 2,000 demonstrators from India and other Asian countries marched through downtown New Delhi carrying banners reading “Don’t trade away our lives” and staged a lie-in. The European Union (EU) is seeking provisions in a proposed trade deal that would push prices of generic drugs made in India beyond the reach of people with the HIV virus in developing countries, said the protesters. “More than 80 percent of the AIDS drugs our medical practitioners use to treat 175,000 people in developing countries are affordable generics from India,” said Paul Cawthorne, a spokesman for Paris-based humanitarian group Medecins Sans Frontieres (MSF). “Beyond AIDS, we rely on producers in India for drugs to treat other illnesses, such as tuberculosis and malaria. We can not afford to let our patients’ lifeline be cut,” Cawthorne said. Affordable medicines produced in India have played a major role in scaling up HIV/AIDS treatment to more than five million people in developing countries, MSF said. Indian-made generics have pushed the average yearly cost of anti-HIV drug treatments down from ๊10,000 per patient in 2000 to ๊70 in 2010. “We all rely on affordable medicines made here in India to stay alive,” said Nepal-based Rajiv Kafle, of the Asia Pacific Network of Positive People. “We don’t want to go back in time, to when our friends and loved ones died because they couldn’t afford the medicines they needed,” Kafle said. The EU is demanding intellectual property provisions in the free trade agreement that exceed what international trade rules require, MSF said. The most damaging measure is “data exclusivity” which would act like a patent and block more affordable generic medicines from the market, even for drugs that are already off patent, the group said. “It would be a colossal mistake to introduce data exclusivity in India, when millions of people across the globe depend on the country as the ‘pharmacy of the developing world’,” said Anand Grover, the UN Special Rapporteur on the Right to Health. The protest was staged to coincide with “sensitive” negotiations in Brussels between India and the 27-member EU on the market-opening pact, which has been under discussion since 2007, MSF said. |
இண்டர்லோக் நாவலால் பள்ளிக்கூடம் பகைவர் கூடமாகிறது- சார்ல்ஸ் சந்தியாகோ சாடல் Posted: 08 Mar 2011 06:37 PM PST அண்மையில் அம்பாங், தெலோக் ஆயர்தாவார் கோலா குபு பாரு இடைநிலைப்பள்ளிகளில் நிகழ்ந்த சம்பவங்கள் சர்சைக்குரிய இண்டர்லோக் நாவலின் தாக்கமே. பள்ளிக்கூடம் என்பது நல்ல விஷயங்களை கற்று கொள்கிற இடமாகும். ஆனால், தற்போதைய நிலைமையே தலைகீழாக இருக்கிறது. குறிப்பாக இந்திய மாணவர்களுக்கு பள்ளிகளில் எதிரிகள் நிறைந்தும் ஆசிரியர்கள் பகைவர்களாகவும் இருக்கிறனர் என சார்ல்ஸ் சந்தியாகோ சாடினார். இது அண்மையில் தெலோக் ஆயர்தாவார் இடைநிலைப்பள்ளியில் சாதிப்பெயரைச் சொல்லி மாணவன் முகத்தில் குத்திய சம்பவம், அதே சமயத்தில், இண்டர்லோக் நாவலில் எழுதியிருந்த விஷயங்களை ஏற்றுக் கொள்ள முடியாமல் அந்நாவலை தலைமசயாசிரியாரிடம் ஒப்படைக்க சென்ற கோலா குபு பாரு இடைநிலைப்பள்ளி இந்திய மாணவர்கள் எந்த ஒரு வலுவான காரணமின்றியும் பெற்றோர்களின் அனுமதின்றியும் 10 மணி நேரம் போலீஸ் விசாரணையில் வைத்துள்ள செயல்கள் மூலம் நிரூபணமாகிறது. இவ்வாறு பெரும்பான்மையினத்தவர்கள் இந்திய மாணவர்களை அவமானப்படுத்தப்படுத்தி தாக்குவதும், தாக்கிப்பேசுவதும் தொடர் கதையாகி வருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளியில் இவ்வாறான விஷயங்கள் நிகழ்ந்துக் கொண்டிருகின்றன. குறிப்பாக இந்திய மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் இவ்வாறான பல பிரச்சனைகள் தலை தூக்கி நிற்கின்றன. தனது பதவியை தவாரகப் பயன்படுத்திய பெற்றோர் ஆசியர் சங்கத் தலைவரும் போலீஸ் அதிகாரியுமான பக்தியார் மட் ரஷிட்டின் செயலும் சம்பந்தப்பட்ட ஆசியர்களின் செயல் கண்டிக்கத்தக்கது என சார்ல்ஸ் சுட்டிக் காட்டினார். ஆகவே, கல்வியமைச்சு சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த ஒரு பார பட்சம் இல்லாமல் தகுந்த நடவடிக்கை எடுத்தாக வேண்டும். அதுமட்டுமில்லாமல் இப்பிரச்சனைகள் உருவாக காரணமாய் இருக்கும் இண்டர்லோக் நாவலை உடனடி மீட்டுக் கொள்ள வேண்டும் என சார்ல்ஸ் சந்தியாகோ கல்வி அமைச்சை கேட்டுக் கொண்டார். |
நகராட்சிமன்ற தலைவராக ஒரு பெண் நியமிக்கப்பட வேண்டும், சார்ல்ஸ் சந்தியாகோ Posted: 08 Mar 2011 12:20 AM PST மூலம் :- மலேசியா இன்று 8 Mar | செய்தி. "பெண்கள் நாட்டின் கண்கள்" என்ற மூதுரைக்கு ஒப்ப ஒவ்வொரு விஷயத்திலும், துறையிலும் பெண்களின் ஈடுபாடு மிக முக்கியம் என தாம் கருதுவதாக டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார். "பெண்களின் நலன் கருதி இயங்கிவரும் சேடவ் எனும் பெண்களை எந்தவித பாரபட்சம் அல்லது வித்தியாசப்படுத்திப் பார்க்கும் அனைத்தையும் ஒழிக்கும் மாநாட்டை நான் வரவேற்கிறேன்", என்றார் சார்ல்ஸ். 1995 இல் மலேசியாவில் அரசியலிலும், முக்கிய முடிவுககளைத் தீர்மானிக்கும் துறையிலும் பெண்களின் ஈடுபாடு 30 விழுக்காடு இருப்பதை உறுதி செய்யத் திட்டமிடப்பட்டது. ஆயினும், 2009 – ம் ஆண்டில் பெண்களின் ஈடுபாடு நாடாளுமன்றத்தில் 10 விழுக்காடுக்குக் குறைவாகவும், அமைச்சரவையில் 6 விழுக்காடுக்குக் குறைவாகவும் உள்ளது என்பதை அவர் சுட்டிக் காட்டினார். அதே வேலையில், வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை பத்து வருடங்காலமாக 47 % விழுக்காடு மட்டுமே உள்ளது. அதிலும் 2009 ஆம் ஆண்டு அரசியல் துறையிலும் அரசு பிரதிநிதிகளின் துறையிலும் பெண்களின் ஈடுபாடு 14 விழுக்காடாக ஆக இருப்பது மிகவும் வேதனையாக உள்ளது என்றாரவர். அரசாங்கத் துறையிலோ அல்லது தனியார் துறையிலோ குழந்தைகள் பராமரிப்பு சேவைகளை தாய்மார்களுக்கு தயார் படுத்திக் கொடுத்தால் பல பெண்கள் வேலைகளுக்குச் செல்லவும் அவர்களது பங்கையும் சேவையையும் பல துறைகளில் ஆற்றவும் ஏதுவாக இருக்கும் என்று அவர் ஆலோசனை கூறினார். மேலும், பெண்களுக்கு சம உரிமை வழங்குவதில் அரசாங்கம் உறுதியாகச் செயல்பட வேண்டும். அதிலும் குறிப்பாக சம்பளம் வழங்கும்போது எந்தவொரு பாரபட்சமின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். மலேசியாவில் ஆண்கள் செய்யும் அதே வேலையைப் பெண்கள் செய்தால் அவர்களது சம்பளத்தை குறைத்துக் கொடுப்பதும் அதிலும் சிலத் துறையில் ஆண்களின் சம்பளத்தை விட 20 விழுக்காடு குறைவாகவே வழங்குவது நியாயமில்லாமலும் சரிசமம் இல்லாமலும் நடந்து கொள்வதை தெளிவாகக் காட்டுகிறது. ஆகவே, தகுதி பெற்ற பெண்கள் ஆண்களுக்கு சரிசமமாக, சமமான வேலை செய்யும் பெண்களுக்கு, சம ஊதியத்தை தர வேண்டும் என சார்ல்ஸ் வலியுறுத்தினார். சிலாங்கூர் மாநிலம் முதல் பெண்ணை நியமிக்க வேண்டும் அதுமட்டுமின்றி, அரசியல் துறையில் பெண்களின் ஈடுபாடு 30 விழுக்காட்டை எட்டிப்பிடிக்கவும், பெண்களுக்கு சம உரிமை வழங்குவதில் கருத்தாய் இருக்கும் சிலாங்கூர் அரசாங்கம், நகராட்சி மன்றத் தலைவராக முதல் பெண்மணியை நியமிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். "நாட்டுக்கும் வீட்டுக்கும் ஒரு சக்தியான மற்றும் வலிமையான பெண்கள் தேவை. அதிலும், அரசியலில் அவர்களது ஈடுபாடும் சேவையும் நாட்டின் சீரான முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் மிக முக்கியம் என்பதில் சிறிதளவுக் கூட ஐயமில்லை", என்பதை சார்ல்ஸ் சந்தியாகு வலியுறுத்தினார். |
Tiada ulasan:
Catat Ulasan