Charles Santiago |
பேச்சு சுதந்திரத்திற்கு தடையா? அரசாங்கத்தின் போக்கு கண்டிக்கத்தக்கது.- சார்ல்ஸ் கண்டனம். Posted: 24 Feb 2011 11:41 PM PST
மலேசியா ஜன நாயக நாடு என நமது தலைவர்களும் மக்களும் மார் தட்டிக் கொண்டாலும் உண்மையில் அதைக் கடைபிடிக்க தவறி விட்டனர் என்றுத்தான் சொல்லவேண்டும். ஹிண்ட்ராப் இண்டர்லோக் எதிராக ஞாயிற்றுக் கிழமை பேரணி நடத்தக் கூடாது எனவும் அதன் மீது போலிஸ் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளார் துணைப் பிரதமர் டான்ஸ்ரீ மொகதீன் யாசின். இவர் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது என சார்ல்ஸ் சந்தியாகோ சாடினார். மலேசியா ஜனநாயக நாடு. நமக்கு பேசும் சுதந்திரம் உள்ளது. அப்படி இருந்தும் ஹிண்ட்ராப்பை பேரணி நடத்தக் கூடாது என சொல்லும் அரசாங்கத்தை பார்த்தல் அவர்கள் நமது அடிப்படை உரிமையில் ஒன்றான போசும் உரிமையை பறிக்கின்றனர் என அவர் மேலும் விவரித்தார். அவர்கள் நடத்தும் பேரணிக்கு போலிஸ் பாதுகாப்பாக இருக்க கூறி அனுமதி கேட்டால் அதை நிராகரித்து இஃது சட்ட விரோத பேரணி என்றும் இப்பேரணியை நடத்தினால் சட்ட விரோத நடவடிக்கை எடுக்கப் படும் எனும் அச்சுறுத்தல் சிறிதளவும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. சர்ச்சைக்குரிய இண்டர்லோக் நாவலுக்கு எதிராக நடத்தப்படும் பேரணியை எதிர்ப்பது ஒட்டு மொத்த இந்தியர்களையும் அவர்களது உரிமைகளையும் அரசாங்கம் சேர்த்து பறிக்கின்றனர் என காட்டுகிறது . இது எங்கள் உரிமை. இப்பேரணி மலேசிய இந்திய சமுதாயத்தின் குரல். அதை நடத்த விடாமல் தடுக்கும் அரசாங்கத்தின் முயற்சி கண்டிக்கத்தது. இண்டர்லோக் நாவல் விவகாரத்தில் அமைதி சாதிப்பதும் இந்தியர்களின் உணர்ச்சிகளையும் இந்தியர்களயும் அரசாங்கம் பொருட்படுத்தாலும் மதிக்காமலும் இருப்பது வெந்த புண்ணில் வேல் பாச்சுவதுப் போல் இந்தியர்களின் மனதை மேலும் மேலும் புண்படுத்துகிறது அரசாங்கம். ஆகவே, இந்தியர்களின் கோபத்துக்கு முற்று புள்ளி வைக்கும் வகையில் பேரணி நடத்த அனுமதியும் பாதுகாப்பும் வழங்குவது மட்டுமில்லாமல் இண்டர்லோக் நாவலை மீட்டுக் கொள்ளும் படி அரசாங்கத்தை கேட்டுக் கொள்வாதாக கூறினார் சார்ல்ஸ் சந்தியாகோ.
சார்ல்ஸ் சந்தியாகோ கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர். |
Posted: 24 Feb 2011 11:34 PM PST அண்மையில் தேசிய பதிவு இலாகா மை டப் தார் மூலம் பதிந்த அனைவருக்கும் பிறப்பு பத்திரம், அடையாள அட்டை மற்றும் குடியுரிமை கிடைக்கும் என கூற முடியாது எனவும் அவ்விண்ணப்பங்கள் பொது விதிமுறைகளும் நிபந்தனைகளும் உட்பட்டே பரிசிளிக்கப் படும் எனவும் அறிவித்துள்ளது. அதேவேளையில் , தகுந்த ஆவணகளை சமர்பித்த மக்களின் விண்ணபங்கள் கூடிய விரைவில் பரீசீலனைக்கப்படும் என உள்துறை அமைச்சு கூறியுள்ளது. அப்படியானால், அரசாங்கத்தின் நோக்கம் தான் என்ன? இந்த ஏழு நாள் பதிவுகள் எதற்காக? என ஆவேசத்துடன் கேள்வி எழுப்பினார் சார்ல்ஸ் சந்தியாகோ. தனக்கு பிறப்பு பத்திரம் வேண்டும் ; அடையாள அட்டை வேண்டும்; குடியுரிமை வேண்டும் எனும் ஆவலால் பதிந்த இம்மக்களுக்கு மறுபடியும் ஏமாற்றமா? மலேசியாவில் பிறந்தும் அதற்கான ஆவணங்கள் இருந்தும் பிரஜா உரிமை பெறவும் பத்திரங்கள் பெறவும் நம் மக்கள் பல ஆண்டுகள் தவம் கிடக்க வேண்டியுள்ளது. ஆராம்பத்தில் இதற்கெல்லாம் முற்று புள்ளி வைக்கவே ”மை டாப்தார் ” ஏற்பாடு செய்துள்ளதாகவும் தலை தூக்கி நிற்கும் இந்தியர்களின் பிரச்சனையை தீர்க்க இது ஏதுவாக இருக்கும் என்ற அரசாங்கத்தின் உறுதிகள் இப்போது என்னவாயிற்று? முறையான ஆவணங்கள் இருந்தும் நமது மக்கள் இப்பிரச்னையால் வாடுகிறார்கள். அப்படியானால் ஆவணங்கள் இல்லாதவரின் கதி என்னவோ? மலேசியாவில் பிறந்து சந்தர்ப்ப சூழ்நிலையால் ஆவணங்கள் இழந்து தவிக்கும் மக்களுக்கு அரசாங்கம் உதவ முன் வராதா? என சார்ல்ஸ் கேள்வி எழுப்பினார். அரசாங்கம் இந்திய சமுதாயம் எதிநோக்கும் பிரச்சனையை அறியும். குடியுரிமையும் தகுந்த பத்திரங்களும் இல்லாமல் பல வசதிகளையும் உதவிகளையும் இந்தியர்கள் இழந்து வருகின்றனர். ஆகவே, அவர்களின் பிரச்சனையை முக்கியாமாக பிறப்பு பத்திரம், அடையாள அட்டை மற்றும் குடியுரிமைப் பிரச்சனையை எந்தவொரு சாக்கு போக்கு சொல்லாமல் மிக விரைவில் தீர்க்க அரசாங்கம் ஆயுத்தமாக வேண்டும் என சார்ல்ஸ் வலியுறுத்தினார்.
சார்ல்ஸ் சந்தியாகோ கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர். |
You are subscribed to email updates from Charles Santiago To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Tiada ulasan:
Catat Ulasan