Isnin, 21 Februari 2011

Charles Santiago

Charles Santiago


வளர்ந்த மாநிலத்தில் குடிநீர் பிரச்னையா? வேடிக்கையாக இருக்கிறது, சார்ல்ஸ்

Posted: 21 Feb 2011 10:14 PM PST

மூலம் :- மலேசியா இன்று

22 Feb | செய்தி.

மலாக்கா வளர்ச்சியடந்த மாநிலம் என்று பல மாதங்களுக்கு முன்பு அதன் முதலமைச்சர் முகமட் அலி ருஸ்தம் அறிவித்திருந்தார். ஆனால், மெர்லிமாவிலுள்ள கம்போங் பாயா யோகியில் வாழ்ந்து வரும் மக்களின் நிலையைப் பார்க்கும்போது அது வெறும் பொய்தான் என தெளிவாகத் தெரிகிறது என்று சார்ல்ஸ் கூறுகிறார்.

"தண்ணீர் மக்களின் அடிப்படை வசதிகளில் ஒன்று. அதைப் பெறுவது அவர்களது உரிமையும் கூட. அதை மக்களுக்கு வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால், இக்கிராமத்து மக்கள் இத்தனை ஆண்டுகளாக குழாய் வழி குடிநீர் இல்லாமல் இருப்பது அரசாங்கத்தின் அலட்சியப் போக்கை மிகத் தெளிவாக காட்டுகிறது என்று சார்ல்ஸ் மேலும் கூறினார்.

"குறைவானவர்களே இருக்கிறார்கள் என்பதால் அவர்களுக்குத் தண்ணீர் வழங்கப்படவில்லை என்பதை நிச்சயமாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு மனிதனுக்கும் தண்ணீர் வழங்கப்படுவதை அரசாங்கம் உறுதி செய்தே ஆக வேண்டும்", என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரான சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தினார்.

இடைத் தேர்தல் வந்ததும், கல்வி அமைச்சர் முகைதின் யாசின் மெர்லிமாவில் புதிய தமிழ்ப் பள்ளிக்கூட கட்டடத்திற்கு கால்கோள் விழா நடத்தினார். ஆனால், தமிழ்ப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டித்தருவதாக வாக்குறுதி அளித்து எத்தனையோ தசாப்தங்கள் கடந்து போய்விட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். "ஒரு வளர்ந்த மாநிலத்தில் தமிழ்ப் பள்ளிக்கூடம் கட்டிக் கொடுப்பதற்கு ஏன் இவ்வளவு இழுபறி என சார்ல்ஸ் வினவினார்.

இவற்றை எல்லாம் பார்க்கும்போது, மக்களின் வாக்குகளைப் பெறத்தான் இந்த நாடகங்கள் நடத்தப்படுகின்றன என்பது தெளிவாகிறது. இதற்கு முன் அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் அத்தொகுதி மக்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

"இப்போது, இடைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மறுபடியும் வாக்குறுதிகள். இந்த வாக்குறுதிகள் எல்லாம் மக்களின் வாக்குகளைப் பெறத்தானே?", என்று அவர் கேள்வி எழுப்பினார்.

"மக்களை ஏமாற்றும் கொள்கையை நிறுத்தி விட்டு அரசாங்கம் மக்களுக்காக உண்மையாக உழைக்க வேண்டும்", என்றாரவர்.


வளர்ந்த மாநிலத்தில் தண்ணீர் பிரச்சனையா? பள்ளி இல்லையா? வேடிக்கையாக இருக்கிறது- சார்ல்ஸ் கேள்வி

Posted: 21 Feb 2011 08:26 PM PST

மலாக்கா வளர்ந்த மாநிலம் என்று பல மாதங்களுக்கு முன்பு அதன் முதலமைச்சர் முகமட் அலி ருஸ்தம் அறிவித்திருந்தார். ஆனால், மெர்லிமாவ் நகரத்தில் உள்ள கம்போங் பாயா யோகியில் வாழ்ந்து வரும் மக்களின் நிலையை பார்க்கும் போது அது வெறும் பொய்தான் என தெளிவாக தெரிகிறது  என்றார்  சார்ல்ஸ் சந்தியாகோ.

தண்ணீர்  மக்களின் அடிப்படை வசதிகளில்  ஒன்று. அதை பெறுவது அவர்களது உரிமையும்  கூட.  அதை மக்களுக்கு வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் இக்கிராமத்து மக்கள் இத்துனை வருடம் நீர் குழாய் வழி குடிநீர் பெறப்படாமல் இருப்பது அரசாங்கத்தின் மெத்தனப் போக்கை மிக தெளிவாக காட்டுகிறது என்று சுட்டிக் காட்டினார் சார்ல்ஸ்.

சிறுப்பான்மையினர்  என்பதால் அவர்களுக்கு தண்ணீர் வழங்கப்படாது என்பதை சிறுதும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. ஒவ்வொரு மனிதனுக்கும் தண்ணீரை வழங்குவதை அரசாங்கம் உறுதி செய்யதாக வேண்டும்.

அதுமட்டுமின்றி, கடந்த வாரம், கல்வி அமைச்சர் முகைதின் யாசின், தமிழ்ப்பள்ளியின் புதிய கட்டிடத்துக்கான கால்கோள்விழாவில் கலந்து கொண்டது மட்டுமில்லாமல்,  தமிழ்ப்பள்ளிக்குப் புதிய கட்டிடம் கட்டித்தருவதாக வாக்குறுதி வழங்கப்பட்டு எத்தனையோ தசாப்தங்கள் கடந்து போய்விட்டதாக உள்ளூர் மக்கள் தெரிவித்திள்ளனர். ஒரு வளர்ந்த மாநிலத்தில்  தமிழ் பள்ளிக் கட்டிக் கொடுப்பதற்கு ஏன் இவ்வளவு இழுப்பறி என வினவினார்.

இதை பார்க்கும் போது, மக்களின் வாக்குகளை பெறவேத்தான் இந்நாடகம் என்பது மிக தெளிவாக தெரிகிறது. அதுமட்டுமின்றி, ஏற்கனவே இவ்வாக்குரிதிகளை அளித்த தே.மு இதுவரை மெர்லிமாவ் மக்களுக்கு  எந்த உதவியையும் செய்யாமலும் குறிப்பாக  அடிப்படை வசதிகளை அவர்களுக்கு வழங்காமலும்   அவர்களை புறக்கணித்து வருகின்றனர்.

இப்போது இடை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் மறுபடியும் இந்த வாக்குறிதிகள், மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பெறுவதற்காகத் தானே? என சார்ல்ஸ் சந்தியாகோ கேள்வி எழுப்பினார்.

இவ்வாறு செய்து மக்களை ஏமாற்றுவதை நிறுத்தி விட்டு அவர்களுக்காக உண்மையாக உழைக்க  வேண்டும் என அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.

 

சார்ல்ஸ் சந்தியாகோ

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்.


இண்டர்லோக் நாவல்: “சுதந்திரம் எங்கே? உரிமை எங்கே”?, சார்ல்ஸ் கேள்வி

Posted: 21 Feb 2011 08:20 PM PST

மூலம் :- செம்பருத்தி

Tuesday,  February 22,  2011 10:23 am

கெடா, லுனாசில் இண்டர்லோக் நாவல் குறித்து நடந்த கருத்தரங்கில் மக்கள் உரிமைக் கட்சியின் தலைவர்களும்  இயக்கத்தினரும் கைது செய்யப்பட்டது மனித அடிப்படை உரிமைக்கு புறம்பானது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

நாடு சுதந்திரம் அடைந்து 53 ஆண்டுகள் ஆனப்பிறகும், ஒரு மனிதன் தனது உணர்வை வெளிப்படுத்த மலேசியாவில் உரிமை வழங்கப்படாமல் இருப்பது மிக வேடிக்கையாக இருக்கிறது என்றார் சார்ல்ஸ்.

தனது குரலை எழுப்புவது, ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமையாகும்.அதிலும் மனித உரிமைக் கட்சி நடத்தியது ஒரு கருத்தரங்கம். இண்டர்லோக் நாவலுக்கு எதிரான கருத்தரங்கம் ஆகும். நாட்டில் கருத்தரங்கம் நடத்தக் கூட உரிமை இல்லையா? என சார்ல்ஸ் கேள்வி எழுப்பினார்.

இந்தியர்களின் உரிமை பறிபோகிறது என கூறிய சார்ல்ஸ் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனது கருத்தை தெரிவிக்க, பேசும் உரிமை உள்ளதை சுட்டிக் காட்டினார்.

இண்டர்லோக் எதிராக கருத்தரங்கம்  செய்த மனித உரிமைக் கட்சியினர்களை கருத்தரங்கத்தை  நடத்த விடாமல், கைது செய்தது ஒட்டு  மொத்த இந்தியர்களின் உரிமையை சேர்த்து பரிப்பதேயாகும். ஜனநாயக நாடு என்று வார்த்தையால் சொல்லிக் கொண்டு இப்படி அவர்களை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

இண்டர்லோக் நாவலுக்கு எதிராக பல இந்தியர்கள் தடைவிதித்திருந்தும் அதற்கு இணக்கம் காட்டாமல், இந்தியர்களின் கருத்தையும் எண்ணத்தையும் சிறிதும் பொருட்படுத்தாமல் நடந்து கொண்டிருக்கிறது அரசாங்கம்.

ஏற்கனவே, இண்டர்லோக் நாவல் விவகாரத்தில் பல இந்தியர்களை கோபத்திற்கு உள்ளாகிருக்கும் அரசாங்கம் தற்போது மனித உரிமை கட்சியினரை கைது செய்து மேலும் பல இந்தியர்களின் கோபத்தையும் ஆவேசத்தையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியர்களின் பிரச்னையை மிக துள்ளியமாக தீர்க்க வேண்டிய அரசாங்கம் ஏன் அமைதி காத்து காலம் தாழ்த்தி வருகிறது என சார்ல்ஸ் கேள்வி எழுப்பினார்.

சர்ச்சைக் குரிய அந்நாவாலை  ஆரம்பத்திலே தடை செய்திருந்தால் இவ்வாறான நடவடிக்கைகளில் மனித உரிமைக் கட்சியினரும் இந்திய சமுதாயமும் இறங்க மாட்டார்கள் அல்லவா?

ஆக, நாடு அமைதியாய் இருப்பது அரசாங்கத்தின் கையில்தான் உள்ளது. ஆதலால் முதலில் மனிதனின் முக்கியமாக இந்தியர்களின் உணர்ச்சியை புரிந்து நடந்துக் கொள்ள வேண்டும்; மனித அடிப்படை உரிமைகளை காக்க வேண்டும் என சார்ல்ஸ் கேட்டுக் கொண்டார்.


இண்டர்லோக் நாவல்: “சுதந்திரம் எங்கே? உரிமை எங்கே”?, சார்ல்ஸ் கேள்வி

Posted: 21 Feb 2011 06:19 PM PST

மூலம் :- மலேசியா இன்று

21 Feb | செய்தி.

கெடா, லுனாசில் இண்டர்லோக் நாவல் குறித்து நடந்த கருத்தரங்கில் மக்கள் உரிமைக் கட்சியின் தலைவர்களும் உறுப்பினர்களும் கைது செய்யப்பட்டது மனித உரிமை மீறலாகும் என்று டிஎபி கிள்ளான நாடாளுமன்ற உறுப்பினர் சாடினார்.

"நாடு சுதந்திரம் அடைந்து 53 ஆண்டுகள் ஆகியும், மலேசியாவில் ஒரு மனிதனுக்கு அவனது உணர்வை வெளிப்படுத்துவதற்கான உரிமை மறுக்கப்படுவது மிக வேடிக்கையாக இருக்கிறது", என்றார் சார்ல்ஸ்.

"தனது குரலை எழுப்புவது ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமையாகும்", என்பதை வலியுறுத்திய சார்ல்ஸ், மனித உரிமைக் கட்சி நடத்தியது ஒரு கருத்தரங்காகும், இண்டர்லோக் நாவலுக்கு எதிரான ஒரு கருத்தரங்கம்; கருத்தரங்கம் நடத்தக்கூட இந்நாட்டு குடிமக்களுக்கு உரிமை இல்லையா? என்று அவர் வினவினார்.

"இந்தியர்களின் உரிமை பறிபோகிறது. அது குறித்து கருத்து தெரிவிக்க, எதிர்ப்பு தெரிவிக்க ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு", என்றாரவர்.

இண்டர்லோக் நாவலுக்கு எதிராகக் கருத்தரங்கம் நடத்த உரிமையுடைய மனித உரிமைக் கட்சியினரை அக்கருத்தரங்கத்தை நடத்த விடாமல் கைது செய்தது ஒட்டுமொத்த இந்தியர்களின் உரிமையைப் பறிப்பதாகும். ஜனநாயக நாடு என்று வார்த்தையளவில் பேசிக்கொண்டு ஜனநாயகத்திற்கு முரணாக அவர்களைக் கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று அவர் மேலும் கூறினார்.

இண்டர்லோக் நாவலுக்கு எதிராக இந்திய சமூகத்தின் பல்வேறு அமைப்புகள் கடும் ஆட்சேபம் தெரிவித்திருப்பதையும் அவர்களது உணர்வுகளைச் சிறுதும் பொருட்படுத்தாமலும் அரசாங்கம் மெத்தனமாக நடந்துகொண்டிருக்கிறது. இப்போது, மக்கள் உரிமைக் கட்சி உறுப்பினர்களைக் கைது செய்து இந்தியர்களின் கோபத்தை அரசாங்கம் சம்பாதித்துள்ளது.

மக்கள் உரிமைக் கட்சியினரும் இதர இந்திய அமைப்புகளும் இண்டர்லோக் நாவலுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் இறங்கியிருப்பதற்கு அரசாங்கம் இவ்விவகாரத்தில் கடைபிடிக்கும் அலட்சியப் போக்குதான் காரணம் என்று கூறிய சார்ல்ஸ், இவ்விவகாரத்தில் அரசாங்கம் ஏன் காலம் தாழ்த்தி வருகிறது என்று வினவினார்.

நாட்டில் அமைதி நிலவ வேண்டுமானல், அரசாங்கம் மக்களின், இந்தியர்களின், உணர்வுகளைப் புரிந்து கொண்டு, மனித உரிமைகளை மதிக்க வேண்டும் என்று அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.


“查爾斯今日也向媒體揭露,直落昂大多數的道路破損不堪,起因正是進出工業區幾頓重的羅里,將羊腸小徑輾壞,處處呈路洞”。

Posted: 21 Feb 2011 03:09 AM PST

Source: Chinapress


直落昂馬來墳場急需撥款筑起圍籬,避免野狗入侵

Posted: 21 Feb 2011 02:58 AM PST

Source: Chinapress


YB Charles Santiago: Everyweek, I will go for jogging.

Posted: 21 Feb 2011 02:46 AM PST

Source: Chinapress

 


港口大巴剎問題多‧查爾斯承諾解決問題

Posted: 21 Feb 2011 02:35 AM PST

Source: Chinapress


查爾斯(右)與楊文來(左2)向市議員的官員瞭解蓄水池情況

Posted: 21 Feb 2011 02:24 AM PST

Source: Chinapress

 


查爾斯(右)與楊文來(左2)向市議員的官員瞭解蓄水池情況。

Posted: 21 Feb 2011 02:07 AM PST

Source: Chinapress

 


சுதந்திரம் எங்கே? உரிமை எங்கே போனது? சார்ல்ஸ் சந்தியாகோ கேள்வி?

Posted: 21 Feb 2011 12:29 AM PST

கெடா, லுனாசில் இண்டர்லோக் நாவல் குறித்து நடந்த கருத்தரங்கில் மக்கள் உரிமைக் கட்சியின் தலைவர்களும் இயக்கத்தினரும் கைது செய்யப்பட்டது மனித அடிப்படை உரிமைக்கு புறம்பானது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

நாடு சுதந்திரம் அடைந்து 53 ஆண்டுகள் ஆனப்பிறகும் , ஒரு மனிதன் தனது உணர்வை வெளிப்படுத்த  மலேசியாவில் உரிமை வழங்கப்படாமல் இருப்பது மிக வேடிக்கையாக இருக்கிறது என்றார் சார்ல்ஸ்.

தனது குரலை எழுப்புவது , ஒவ்வொரு மனிதனின் அடிப்படை உரிமையாகும்.அதிலும் மனித உரிமைக் கட்சி நடத்தியது ஒரு கருத்தரங்கம். இண்டர்லோக் நாவலுக்கு எதிரான கருத்தரங்கம் ஆகும். நாட்டில் கருத்தரங்கம் நடத்தக் கூட உரிமை இல்லையா என சார்ல்ஸ் கேள்வி எழுப்பினார். இந்தியர்களின் உரிமை பறிபோகிறது என கூறிய சார்ல்ஸ் ஒவ்வொரு தனிமனிதனுக்கும் தனது கருத்தை தெரிவிக்க , பேசும் உரிமை உள்ளதை சுட்டிக் காட்டினார்.

இண்டர்லோக் எதிராக கருத்தரங்கம்  செய்த மனித உரிமைக் கட்சியினர்களை கருத்தரங்கத்தை  நடத்த விடாமல், கைது செய்தது ஒட்டு  மொத்த இந்தியர்களின் உரிமையை சேர்த்து பரிப்பதேயாகும். ஜனநாயக நாடு என்று வார்த்தையால் சொல்லிக் கொண்டு இப்படி அவர்களை கைது செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என சார்ல்ஸ் சந்தியாகோ கூறினார்.

இண்டர்லோக் நாவலுக்கு எதிராக பல இந்தியர்கள் தடைவிதித்திருந்தும் அதற்கு இணக்கம் காட்டாமல், இந்தியர்களின் கருத்தையும் எண்ணத்தையும் சிறிதும் பொருட்படுத்தாமல் நடந்து கொண்டிருக்கிறது அரசாங்கம். ஏற்கனவே, இண்டர்லோக் நாவல் விவகாரத்தில் பல இந்தியர்களை கோபத்திற்கு உள்ளாகிருக்கும் அரசாங்கம் தற்போது மனித உரிமை கட்சியினரை கைது செய்து மேலும் பல இந்தியர்களின் கோபத்தையும் ஆவேசத்தையும் சம்பாதித்துக் கொண்டிருக்கிறது.

இந்தியர்களின் பிரச்னையை மிக துள்ளியமாக தீர்க்க வேண்டிய அரசாங்கம் ஏன் அமைதி காத்து காலம் தாழ்த்தி வருகிறது என சார்ல்ஸ்  கேள்வி எழுப்பினார். சர்ச்சைக் குரிய அந்நாவாலை   ஆரம்பத்திலே தடை செய்திருந்தால் இவ்வாறான நடவடிக்கைகளில் மனித உரிமைக் கட்சியினரும் இந்திய சமுதாயமும் இறங்க மாட்டார்கள் அல்லவா? ஆக, நாடு அமைதியாய் இருப்பது அரசாங்கத்தின் கையில்தான் உள்ளது. ஆதலால் முதலில் மனிதனின் முக்கியமாக இந்தியர்களின் உணர்ச்சியை புரிந்து நடந்துக் கொள்ள வேண்டும் ; மனித அடிப்படை உரிமைகளை காக்க வேண்டும் என சார்ல்ஸ் கேட்டுக் கொண்டார்.

சார்ல்ஸ் சந்தியாகோ

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்.


Tiada ulasan:

Catat Ulasan