Ahad, 20 Februari 2011

Charles Santiago

Charles Santiago


இந்தியர்களின் பிரச்னைகள் ஒரே மாதத்தில் தீர்க்கப்பட வேண்டும், சந்தியாகு

Posted: 20 Feb 2011 09:13 PM PST

மூலம் :- மலேசியா இன்று

18 Feb | செய்தி.

மலேசியாவில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் தங்களைப் பற்றிய அடையாளப் பத்திரங்கள் எதுவும் இல்லாமல் வாழ்ந்து வருவது வேதனைக்குரிய விசயம் என்கிறார் டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு.

இம்மாதம் 19 முதல் 26 ஆம் தேதி வரையில் "மை டாப்தார்" எனும் பதிவு இயக்கம் பத்திரங்கள் ஏதுமற்ற இந்தியர்களை பதிவு செய்யும் என்று மனிதவள அமைச்சர் டாக்டர் எஸ். சுப்ரமணியம் செய்துள்ள அறிவிப்பை விவேகமான செயல் என வரவேற்ற சார்ல்ஸ், பதிவு செய்யப்படும் அனைத்து இந்தியர்களுக்கும் குடியுரிமை, பிறப்பு பத்திரம் மற்றும் அடையாள அட்டை கிடைக்கும் என்பதை இவ்வியக்கமும் அரசாங்கமும் உறுதிப்படுத்துமா என அவர் வினவினார்.

"குடியுரிமை பெற முடியாமல் போனதற்கு மக்களின் அறியாமை மட்டும் காரணமல்ல. மலேசியாவில் பிறந்த எத்தனையோ இந்தியர்கள் குடியுரிமைக்கு பல முறை விண்ணப்பித்தும் தேசிய பதிவு இலாகா பல காரணங்களைக் காட்டி அவர்களின் விண்ணப்பங்களை நிராகரித்துள்ளது ஊரறிந்த உண்மை.

"மலேசிய குடியுரிமைப் பெற பல ஆண்டுகள் தவம் இருக்க வேண்டியுள்ளது. விண்ணப்பித்திருந்தும் அவர்களுக்கு குடியுரிமை கிடைக்கவில்லை என்பது அசைக்க முடியாத உண்மையாகும். இக்கதிக்கு ஆளானவர்கள் பலர் என்னுடைய அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர்.

"ஆகவே, குடியுரிமைப் பெற விண்ணப்பித்துள்ள இந்திய மக்களை அல்லல் பட விடாமல், அவர்களின் பிரச்னைக்கு உடனே தீர்வு காண வேண்டும். காலத்தை வீணடிக்காமல் அவர்களின் விண்ணப்பங்களை குறைந்தபட்சம் ஒரே மாதத்திற்குள் பரிசீலனை செய்து ஆவன செய்யப்படுவதை மனிதவள அமைச்சு உறுதிப்படுத்த வேண்டும்", என்று சார்ல்ஸ் கேட்டுக்கொண்டார்.

முன்பும் இவ்வாறான நடவடிக்கைகள் பற்றிய அறிக்கைகள் அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளன என்பதைச் சுட்டிக் காட்டிய அவர், இம்முறை அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கை மக்களை ஏமாற்றுவதற்காக இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தினார்.


Tiada ulasan:

Catat Ulasan