Charles Santiago |
எகிப்தின் புரட்சி – சரவாக் மக்களுக்கு நல்ல எதிர்ப்பார்ப்பு – சார்லஸ் சந்தியாகோ நம்பிக்கை. Posted: 14 Feb 2011 02:18 AM PST இராணுவப் படைத் தலைவரான அப்துல் தைப் மஹ்முத்தால் புறக்கணிக்கப் பட்ட சரவாக் மக்களுக்கு, எகிப்திய புரட்சி ஒரு நல்ல எதிர்ப்பார்ப்பை உண்டாகுகின்றது என நம்பிக்கை தெரிவித்துள்ளார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ. தயிப் கடந்த 30 ஆண்டுக் காலமாக, முதிர்வடைந்த அரசியல்வாதியாக அவரும் தேசிய முன்னணியிலுள்ள அவரது குழுவினரும் சேர்ந்து ஏராளமான சொத்துக்களையும் செல்வங்களையும் சேர்த்து குவித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் சரவாக் மக்களும் சுதேசி மக்களும் வறுமையிலும் ஏழ்மையிலும் வாடிக் கொண்டிருக்கின்றனர். வெட்டுமரத் தொழிலில் தைப் மற்றும் அவரது குடும்பத்தினரின் பங்கேற்ப்பு ஊழலுக்கு இட்டுச் செண்டுள்ளது; ஊழல் மற்றும் விலை மாற்றம் அதாவது வெட்டுமர நிறுவனத்தின் பொருளாதார மாற்றத்தின் விளக்கங்களை கண்டுபிடிக்க மிகவும் கடினமாக உள்ளது. இதில் மலேசிய நிறுவனங்களும் உள்ளடங்கியுள்ளது. 2007-ல், சரவாக்கிலிருந்து வெட்டு மரங்களை எடுக்கும் மொத்தம் 9 ஜப்பானியக் கடற் பயண நிறுவனங்கள், ஏழு வருடங்களாக 1.1 பில்லியன் யேன் கணக்கை காட்ட முடியவில்லை என ஜெபுன் டைம்ஸ் ( JAPAN TIMES) வெளியிட்டிருந்தது. அதே அறிக்கை , அப்பணம் தைப் குடும்ப விவகார சந்பந்தமாக சரவாக் அதிகாரிக்கு ஹாங் காங் முகவர் மூலம் லஞ்சமாக வழங்கப்பட்டது எனவும் தெரிவித்திருந்தது. வெட்டு மரத்தொழிலில் வருமானத்தைத் தற்காத்துக் கொள்ளவேண்டும் என்பதற்காக, தாய்பின் நிர்வாகம் பேனான் பெண்கள் வெட்டு மர முதலாளிகளாலும் தொழிலாளிகளாலும் கற்பழிக்கப் பட்டத்தை கண்டும் காணமல் இருந்தனர். அதிக வெட்டு மரக் காரணத்தால், சரவாக் முதன்மை காட்டில் 10 % விழுக்காடு மட்டுமே மிஞ்சியுள்ளது.சுதேசி மக்களின் நிலத்தை அளித்து விட்டது. தைப், தனது குடும்பத்தின் அதிகாரத்தில் உள்ள CAHAYA MATA சரவாக் நிறுவனம் மூலம் தொடர்ந்து பணத்தை சம்பாத்தித்துக் கொண்டுத்தான் இருக்கிறது. அது சரவாக்கில் சாலை நிர்மாணிப்பு மற்றும் பாதுகாப்பதர்க்கான அரசாங்க ஒப்பந்தம், விமான நிலையங்களை மேம்படுத்துதல் மற்றும் மலிவு வீடுகளுகுண்டான கூரைகளை விநியோகிப்பது மூலம் ஆதாயம் பெறுகின்றது. அதுமட்டுமின்றி,2037 -க்குள் மொத்தம் 51 அணைக்கட்டுகள் சுதேசிகளுக்கு பதிலாக கட்டப்படலாம். ஆயினும் எவ்வளவுதான் லஞ்சமும் உழலும் பரவி இருந்தாலும், தைப் அதிகாரத்தை துஷ்பிரயோகிப்பதிலிருந்தும் அதிகாரத்திலிருந்து வெளியாகுவதிளிருந்தும் மறுக்கிறார். மலேசியாகினியில் வெளியான செய்தியின்படி, வேறு எவராவது தகுதியானவர் இருந்தால் தாம் விலகி கொள்வேன் எனக் கூறியிருந்ததாக வெளியிட்டிருந்தது. ஒருவேளை அவரைப்போல் உழல் நிறைந்தவராகவும், தைப்புக்கு விசுவாசமனவரை விலை கொடுத்து வாங்கமுடிபவரையாகவும் தேடுகிறார் போலும். அனால் இது இன்னும் முடிவுபெறவில்லை.சரவாக் மாநிலத்தின் தேர்தல் காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. எகிப்தில் ஏற்பட்ட புரட்சியும் அதன் பலனும் சரவாக் மக்களின் உற்சாகம் மேலோங்க வேண்டும். அதுமட்டுமின்றி தமக்கு இருக்கும் உரிமைகளையும் குறிப்பாக வாக்குரிமையை பயன்படுத்தி தைப்பை எதிர்கொள்ள துணியவேண்டும். நல்லாட்சி மற்றும் கணக்கிவியல் அரசாங்கம் பெற அவர்கள் துணிந்து போராட வேண்டும். மெசிர் மக்கள் பல போராட்டங்களுக்கு பின்பும் 300 பேரின் மரணத்திற்கு பின்பும் மனம் தளராமல் மக்கள் சக்தியை பயன்படுத்தி வலுப்படுத்தி நினைத்ததை சாதித்து விட்டனர். அவர்களால் முடியும் என்றால் எகிப்த்தில் பாமர மக்களால் மாற்றம் கொண்டு வர முடியும் என்றால் சரவாக்கிலும் மாற்றம் கொண்டு வர முடியும். அது சரவாக் மக்கள் கையில் தான் உள்ளது என சார்ல்ஸ் சந்தியாகோ நம்பிக்கை தெரிவித்தார்.
சார்ல்ஸ் சந்தியாகோ கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் |
Posted: 14 Feb 2011 02:14 AM PST காலணியில் இந்து தெய்வப் படங்கள் அச்சிட்டு விற்பனை செய்யும் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ தெரிவித்தார். தற்போதைய கால கட்டத்தைப் பார்த்தால் இந்தியர்களை எப்படியெல்லாம் இழிவுபடுத்த முடியுமோ அப்படியெல்லாம் இழுவு படுத்திக் கொண்டிருகின்றனர். சமீபத்தில் இண்டர்லோக் நாவலில் இந்தியர்களை குறிப்பாக ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை கேவலப்படுத்தி ஒட்டுமொத்த இந்தியர்களும் தலை குனியும் அளவுக்கு எழுதப்பட்டிருந்தது. பலர் பல தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவித்திருந்தும் அரசாங்கம் அநாவலை மீட்டுக் கொள்ள இணக்கம் காட்டுவதாக இல்லை. இதனை அடுத்து இந்து தெய்வங்களின் படங்களை செருப்பில் அச்சிட்டு விற்பனை செய்திருப்பது, வேண்டுமென்றே இந்தியர்களின் கோவத்தை தூண்டுவதற்காக உள்ளத்துப் போல் தெரிகிறது. மற்ற மதத்தையும் சமயத்தையும் மதிக்க வேண்டியது மிக முக்கியம்.ஆனால் மலேசியாவில் தலைகீழாக நடந்துக் கொண்டிருக்கின்றது. அதை அறிந்தும் அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்காமல் இருப்பது மிக வியப்பாக உள்ளது என சார்ல்ஸ் கூறினார். நாட்டின் ஒற்றுமையையும் நல்லுறவையும் பிளவுப் படும் வகையில் பல நிகழ்வுகள் மலேசியாவில் நடந்துக் கொண்டிருக்கின்றன. அதை தடுத்து நிறுத்தாமல் அவ்வாறான பிரச்சனைகள் மீண்டும் நிலவாமல் இருக்க அரசாங்கம் என்ன செய்துள்ளது என சார்ல்ஸ் கேள்வி எழுப்பினார். அரசாங்கம் என்பது நாட்டின் ஒற்றுமையை பேணிக்காக்க வேண்டிய ஒன்று. மக்களிடம் ஒற்றுமையை மேலும் மெருகூட்ட வேண்டும். ஒற்றுமையை பிளவு பட செய்யும் காரியங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமே தவிர அதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்பத்தல்ல.ஆகவே , இந்தியர்களை மேலும் மேலும் புண்படுத்தும் செயல்களைளையும் தரப்பினர்களையும் பாரபட்சம் இல்லாமல் தண்டித்தாக வேண்டும். அவர்கள் மீது அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என சார்ல்ஸ் வலியுறுத்தினார். சார்ல்ஸ் சந்தியாகோ கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் |
You are subscribed to email updates from Charles Santiago To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 |
Tiada ulasan:
Catat Ulasan