Jumaat, 11 Februari 2011

Charles Santiago

Charles Santiago


பொருட்களின் விலை ஏற்றம் – பாமர மக்களுக்கு சுமை.

Posted: 10 Feb 2011 11:38 PM PST

தற்போதைய பொருளாதார மந்த நிலையின் காரணமாக பொருட்களின் விலை ஏற்றம் காணுவது சகித்துக் கொள்ள முடியாத விஷயமாகும்.

அண்மையில் சீனி, எண்ணெய், வாயு விலை படிப் படியாக ஏற்றம் கண்டு வருகிறது. இவ்வாறான நிலை குறைந்த வருமானம் பெரும் மக்களுக்கு பெரும் சுமையாக இருக்கிறது. இவ்விலை ஏற்றத்தினால் பாமர மக்கள் பெரும் பாதிப்புகுள்ளகின்றனர்.

இவ்வாறான நிலையில்  அரச உதவிப் பணத் தொகையை அரசாங்கம் குறைக்க உத்தேசித்திருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சார்ல்ஸ் சந்தியாகோ  கூறினார்.

அக்கழிவுத் தொகை இல்லையேல் அல்லது மேலும் குறைக்கப் பட்டால் அதன் சுமை  குறைந்த வருமானம் பெரும் மக்களின் தலையில்தான் வந்து விழும்; அச்சுமையை அவர்கள்தான் சுமக்க நேரிடும். அது அவர்களை வறுமைக்கு இட்டுச் செல்லும் என்பதில் சிறிதளவுக் கூட ஐயமில்லை.

அதுமட்டுமின்றி மலேசியாவில் மொத்தம் 34 % மக்கள் RM 720 -க்கு கீழ் அதாவது வறுமை கோட்டிற்கு கீழ்தான் ஊதியம் பெறுகின்றனர். இதை பார்க்கையில் இம்மக்களின் வருவாய் தற்போதைய காலக் கட்டத்திற்கு தகுந்தவையாக இல்லை. தற்போதைய வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட இச்சம்பளம் போதுமானதா ? என சார்ல்ஸ் சந்தியாகோ கேள்வி எழுப்பினார்.

அகவே, அரசாங்கம் குறைந்த பட்ச சம்பளமாக RM 1500 – லிருந்து  நியமிக்க வேண்டும்.அதுமட்டுமின்றி, உதவிப் பணக் கழிவை குறைப்பதிலிருந்து மீட்டுக் கொள்ள வேண்டும்  எனவும்  சார்ல்ஸ் கேட்டுக் கொண்டார். இவ்வாறு செய்தாலொழிய மக்களின் சுமையை குறைக்க முடியும் என அவர் மேலும் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

மாண்புமிகு சார்ல்ஸ் சந்தியாகோ

கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர்


Tiada ulasan:

Catat Ulasan