Pengikut

Charles Santiago

Posted by : Unknown | Rabu, 26 Januari 2011 | Published in

sumber :-

Charles Santiago


அரசாங்கம் என்பது மக்களின் நலனை தொடர்ந்து காக்க வேண்டிய ஒன்று. தேர்தல் நாட்களில் மட்டும் அல்ல- – சார்ல்ஸ் சந்தியாகோ வலியுறுத்தல்.

Posted: 26 Jan 2011 10:34 PM PST

லாபிஸில் 40  ஆண்டுகளுக்குப் பிறகு 69 வயது ஆடவரான லிம் லை செங்கிற்கு பிரஜாவுரிமை சான்றிதழ் வழங்கப்படுள்ளது.அவர் ஜொகூரில் பிறந்தவர். ஆயினும் ஜப்பானியர் ஆண்ட கால கட்டத்தில் தீவிபத்தினால் அவரது பிறப்பு பத்திரமும் இதர பத்திரங்களும் முற்றாக அழிந்த காரணத்தால் 40 வருடமாக பலமுறை பிரஜாவுரிமைக்கு விண்ணப்பித்திருந்தும் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

ஆனால், நேற்றைய முன்தினம்  இவருக்கு பிரஜாவுரிமை நற்சான்றிதழ்  வழங்கபட்டுள்ளது. இவருடன் சேர்ந்து 49 பேர்களுக்கு பிரஜாவுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.ஸ்ரீ லங்காவில் பிறந்த கே.ராசமணி, முன்னிலையாளர் பணியிலிருந்து ஒய்வு பெற்ற யொங் கிம் தத் (70 ), இளம்வயதிரான முஹமத்  சிக்ரி முஹமத் தர்மிசி மற்றும் 1 வயது ஏழு மாதம் நிரம்பிய ஏக சபினா மிண்டர்டோ ஆகியோரும் இப்பட்டியலில் அடங்குவர்.

இதையெல்லாம் கேட்க மகிழ்ச்சியாய் இருந்தாலும்,  இங்கு எழும் கேள்வி என்னவென்றால் ஏன் இவர்களுக்கெல்லாம் இப்பொழுது பிரஜாவுறிமைக் கிடைத்துள்ளது என கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ கேள்வி எழுப்பினார்.மலேசியாவில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் குடியுரிமை உள்ளது. அப்படி இருப்பின் மலேசியாவில் குறிப்பாக ஜொகூரில் பிறந்த லிம் தனது பிரஜாவுரிமைப் பெறுவதற்காக ஏன் 40 ஆண்டுகள் காக்க வேண்டியுள்ளது? இப்படி ஒரு லிம் அல்ல இரண்டு லிம் அல்ல பல்லாயிரக்கணக்கான லிம்கள் நம் நாட்டில் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்த  ஒன்று.

50-ஆண்டுகாலமாக தேசிய முன்னணித்தான் நாட்டை ஆண்டுவந்துள்ளது. இவ்வளவு வருடம் இம்மக்கள் பிரஜாவுரிமை இல்லாமல் அல்லல் பட்டதை கண்டும் காணாதவாறு இருந்தார்களா? இல்லை அவர்களை சற்றுக் கூட பொருட்படுத்தவில்லையா? என சார்ல்ஸ் கேள்வி எழுப்பினார்.

தேர்தல் வந்தால் தான் மக்கள் பிரச்சனை அவர்களது கண்களுக்குப் புலப்படுமா? நமது பிரச்சனையைத் தீர்ப்பார்களா? இவர்கள் செய்வதைப் பார்த்தால் ஒவ்வொரு மாதமும் தேர்தல் இருந்தால்தான்  மக்களது பிரச்சனைத் தீரும் போல இருக்கிறது என சார்ல்ஸ் சாடினார்.

பதிவு இலாகாவின் தகவல்படி , 2009 -ல் 32 ,927 விண்ணப்பங்களை பெற்றுள்ளதாக கூரியுள்ளனர். ஆனால், அத்தொகையில்  1 % விளுக்காட்டினருக்குக் கூட  நற்சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பது மிக வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.

இதுவெல்லாம் பார்க்கும் போது, மக்களை ஏமாற்றுவதற்காகவும், மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவே அவர்கள் இவ்வாறு நல்லது செய்வதுப் போல் பாசாங்கு செய்கிறார்களே தவிர மக்களின் நலனை காப்பதற்காக இல்லை என மிக தெளிவாக தெரிகிறது. குடியுரிமைக் கொடுக்க எண்ணம் கொண்டிருந்தால் ஏன் சான்றிதழ் கொடுக்க வேண்டும் ? அடையாள அட்டையையே கொடுத்திருக்கலாமே? என பலர் சிந்திக்கும் வகையில் கேள்வி எழுப்பினார் சார்ல்ஸ்.

ஆகவே, இப்படி வேஷம் போடும் கூட்டங்களை கண்டு மக்கள் ஏமாறக் கூடாது. மக்கள் கடந்த காலத்தில் நடந்தவற்ரையையும் நடந்துக் கொண்டிருப்பதையும்  அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆதலால், நிலவி வரும் சூழ்நிலையை நன்றாக சிந்தித்து சீர்தூக்கி பார்த்து வாக்களிக்க வேண்டும். விருந்தும்  மருந்தும் மூன்று வேலை என்பதற்கொப்ப தேர்தல் முடியும் வரைதான் இச்சலுகைகள். அதன் பிறகு யார் வருவார்?எவர் உதவி செய்வார்? என்ன நிலையாகும்? என்றெல்லாம் மக்கள் நன்கு ஆராய வேண்டும்.

நான் குறிப்பிட்ட இந்த கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என எவரையும் வற்புறுத்தவில்லை. ஆனால், எது அவர்களுக்கும் அடுத்த தலைமுறையினருக்கும் சிறந்தது என்பதை இப்பொழுதே முடிவு செய்தாக வேண்டிய சூழ்நிலை தெனாங்கில் ஏற்ப்பட்டுள்ளது. ஆகவே, மக்கள் மாற்றத்தைக் கொண்டு வர முனைய வேண்டும்.மாற்றம் தான் நல்ல முன்னேற்றம். மாற்றத்தை ஏற்படுத்த போராடுவோம். ஏனெனில் அரசாங்கம் என்பது மக்களை தொடர்ந்து காக்க வேண்டிய ஒன்று. தேர்தல் நாட்களில் மட்டுமல்ல என மிக தெளிவாக வலியுறுத்தினார் சார்ல்ஸ் சந்தியாகோ


இண்டர்லோக் நாவல் மீட்டுக் கொள்ளப்படாவிட்டால் தேசிய முன்னணியிலிருந்து விலக ம இ கா தயாரா?

Posted: 26 Jan 2011 10:10 PM PST

மூலம் :- மலேசிய நண்பன்


Enhance Freedom & Democratic Space in Amending PPPA.

Posted: 26 Jan 2011 08:27 PM PST

Enhance Freedom & Democratic Space in Amending PPPA.

The Home Ministry  recently revealed its intention to table amendments to the Printing Presses and Publications Act 1984 (PPPA) when Parliament reconvenes in March.

The government  has  tried to allay fears that the Ministry was trying to maintain a tighter grip on the press.

However, there is  fear and skepticism  among the rakyat, especially netizens that the government will further stifle freedom of expression and access to information.

There is a strong concern that the changes to the law is designed to control control  on- line media such as Malaysiakini, FreeMalaysiaToday and Malaysia Insider and other influential blogs.

Essentially, the amendment will destroy alternative and critical reporting in the country.

In this way, the BN media will continue to dominate and control the minds of Malaysians and build consensus.

Furthermore, the intended changes is in violation of the government  commitment not to tinker with on-line media.

The proliferation of digital technology has enabled Malaysians of all stripes to receive and disseminate information at little or no cost.

More importantly, it has made possible ordinary citizen’s ability to exercise their democratic right to speak and express themselves freely, as evident in the amount of online interaction in contemporary Malaysia.

Thus, I call upon the government not be hasty in pushing forward with the amendment and withdraw any intention to amend the PPPA  immediately.

Charles Santiago
Member of Parliament, Klang


(0) Comments

Leave a Response

Sayap Parti