Pengikut

Charles Santiago

Posted by : Unknown | Isnin, 13 September 2010 | Published in

sumber :-

Charles Santiago


புக்கிட் காசிங் தீர்ப்பு : நாம் அறியாத ஒன்று?

Posted: 13 Sep 2010 01:28 AM PDT

வழக்கமாக நாம் விபத்துகளிலிருந்தோ அல்லது துயரத்திலிருந்தோ சில விஷயங்களை கற்றுக் கொள்கிறோம். ஆனால் மலேசியாவில் எதிர்மறையாக உள்ளது. இங்கு அரசாங்கம் அதன் இலக்கா மற்றும் அமைச்சகம் ( MINISTRIES ) அவர்களது ஆட்டம் ஆபத்தானது என தெரியும். அது ஒரு பேரிடரென்று சொல்லவேத் தேவையில்லை. அண்மையில் அப்பட்டியலில் உள்ளடங்கியுள்ள விஷயம் விவாதத்திற்கு உட்பட்ட புக்கிட் காசிங் மேம்பாட்ட்டுத் திட்டமாகும்.

108  குடிமக்கள் விண்ணபித்திருந்த சட்ட மறு ஆய்வு மனுதாக்கலை உயர் நீதி மன்றம் ( HIGH COURT ) நிராகரித்துள்ளது. அதில் அம்மக்கள் கோலாலம்பூர் மேயர் வெளியிட்டிருந்த மேம்பாட்டு ஆணைக்கு சவாலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது, தற்போது காசிங் மெரிடியன் நிறுவனம் ( Gasing Meridian Sdn . Bhd )  15 .5 ஏக்கர் பரப்பளவில் 70 மாளிகை வீடுகளை புக்கிட் காசிங்கில் கட்டலாம் எனும் உத்திரவாதத்தை, அக்குடிமக்கள் தாங்களின்  பாதுகாப்பு கருதி அத்திட்டத்தை எதிர்கின்றனர்.

உயர் நீதி மன்ற நீதிபதி, அசிசா அலி (Azizah Ali ), உத்தேசித்திருந்த அக்கட்டிட அமைப்பிற்கான இடம் தனியார் நிலமாகும். அஃது இயற்கை வள மேற்பரப்பில் அல்ல என அவர் தீர்ப்பில் தெரிவித்திருந்தார்.

அவர் மேலும், Federal Territories Planning Act 1982 -ன் படி இந்தச் சட்டம் மேம்பாட்டுக்கு பயன்படுதக்கூடியவை. அதனால் குடிமக்கள் மேம்பாட்டுகளைப் பற்றி தெரிந்துக் கொள்ள எந்தவொரு உரிமையும் இல்லை என்றார். ஒருக்கால் இது பட்டணம் மற்றும் நாட்டுப்புற திட்டச் சட்ட்ம் 1976 ( Town and Country Planning Act 1976) கீழ் இருந்திருந்தால் வாய்புள்ளது.ஆனால் இவ்வழக்கில் அதை பயன்படுத்தமுடியாது என்று மேலும் விளக்கமளித்தார்.

ஆனாலும் , இவ்வழக்கை மிக துள்ளியாக எண்ணி விட முடியாது.ஏனெனில் சிட்டி ஹால் (City Hall  ) திட்ட கொள்கையைப் பற்றி பல முக்கியமான கேள்விகள் எழும்பியுள்ளன. அதுமட்டுமின்றி இதில் ஆயிரக்கணக்கான குடிமக்களின் வாழ்க்கை அடங்கியுள்ளது.அதிலும் இத்திட்டம் ஒரு அபாயகரமான சுற்றுசூழலை உருவாக்கக் கூடிய சாத்தியம் உள்ளது என மிக தெளிவாக தெரிகிறது.

உதாரணத்திற்கு, எவ்வளவுத்தான் கூட்டரசு அரசியலமைப்புச் சட்டம் ( Federal Contitution )ல் கருத்துக்களை வெளிப்படுத்த உரிமைகளும் சுதந்திரமும் கொடுக்கப்பட்டிருந்தாலும் போலிஸ் சட்டம் உட்பட வெவ்வேறான செயற்திட்டங்களை பயன்படுத்தி அமைதி மறியல்/கூட்டங்களை அனுமதிக்காமல் தடைபோடுகின்றனர்.

எனது கேள்வி மிக சுலபமானது.ஒரு வேளை நாட்டின் வழக்கு விரோதமில்லாத / நியாயமான மாறுபட்ட கருத்தும் தெரிவிக்க கடிவாளம் போட வெவ்வேரான சில சட்டங்கள் பயன்படுத்தலாம் என்றால், ஏன் இவ்வழக்கில் உள்ள உண்ணதமான சில விஷயங்களை சீர்தூக்கிப்பார்த்த பிறகு தீர்மானங்களை வழங்கி இருக்கக்கூடாதா?
குறிப்பிட்டிறருந்த அந்நிலம் 49 விழுக்காடு 26 – 35 டிகிரி சரிவாக உள்ளது. அதிலும் மிக அதிகமாக 37 விழுக்காடு 16 – 25 டிகிரிக்குள் உட்பட்டுள்ளது.

புகிட் காசிங்கில் அதிக மண் திரட்டுவதால் மிக சுலபமாக மண் சரிவு / நில சரிவு ஏற்பாட அதிக வாய்ப்புள்ளது.
மலேசியாவில் இதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை. அதிகாரிகள் மேம்பாடு திட்டம் நடக்கும் போது பாதுகாப்பாக இருக்கிறது என்றால் திருப்திதான் என்ற வகையில் விசுவாசம் இல்லாமல் இருக்கின்றனர்.
அய்ல‌ந் த‌வ‌ர் (Highland Tower ) அழிந்த‌து, புக்கிட் அந்தார‌ப‌ங்சா ( Bukit Antarabangsa  ) பேர‌ழிவுகளை ந‌ம்மால் ம‌ற‌க்க‌ முடியாது. இற‌ப்புக‌ள்,துற்நாற்ற‌ம் வீசும் அள‌வில் ச‌ட‌ல‌ங்க‌ள், உற்றார் உறவின‌ர்க‌ளின் வ‌லியும் வேத‌னைக‌ளும் ந‌ம் நினைவில் இருந்து அழிய‌ முடியாத‌ துய‌ர‌ங்க‌ள்.

இப்பொழுது ஒரு சில‌ புள்ளிவிவ‌ர‌ங்க‌ளை பார்ப்போம்- க‌ட‌ந்த‌ 15 வ‌ருட‌ங்கால‌மாக‌ தீப‌க‌ற்ப ம‌லேசியாவில் ம‌ட்டும் 14 பெரிய‌ அள‌விலான‌ நில‌ச்ச‌ரிவுக‌ள் நட‌ந்துள்ள‌ன‌. அதில் மொத்த‌ம் 68 பேர் உயிர் இழ‌ந்துள்ள‌ன‌ர்.

ஒரு வேளை, இஃது அவ்வ‌ள‌வாக‌ ப‌ய‌ப்பிட‌க்கூடிய‌ வ‌கையில் இல்லையெனில்,  மார்ச் 2007- ல் புக்கிட் காசிங்கில் உள்ள‌ கோவில் ஒன்றில் கோவிலை புதுபிக்கும் வேளைக‌ளில் ந‌டத்துக்கொண்டிருக்கும் போது நில‌ச‌ரிவு ஏற்ப‌ட்ட‌து. அத‌னைத் தொட‌ர்ந்து அடுத்த‌ ஆண்டில் ஜ‌ன‌வ‌ரி 5- ல் அதே கோவிலுக்கு அருகே ம‌ற்றொரு நில‌ச‌ரிவு ஏற்பட்டுள்ள‌து.
மேம்பாட்டாள‌ர்க‌ளும் சித்தி ஹால் ( City Hall ) இவையிர‌ண்டு த‌ர‌ப்பின‌ரும், புக்கிட் காசிங் நில‌ம் பாதுகாப்பான‌ முறையில் பேம்ப‌டுத்த‌ முடியும் என்கிற‌ தெளிவான‌ சாட்சிய‌ங்க‌ளையும் குறிப்புக‌ளையும் காட்டும் ந‌க‌ல்க‌ளை கேட்டிருக்கும் விண்ண‌ப்ப‌த்தை செவிமடுக்க‌ ம‌றுக்கின்ற‌ன‌ர்.
City Council வெளிப்படையான‌ கொள்கை கொண்டிருக்க‌ வேண்டும்.அதைத‌விர்த்து, மேம்பாட்டாள‌ர்க‌ளுக்கு பின்னால் உட‌ந்தையாக‌ இருந்து இத்திட்ட‌த்தை ஊக்குவித்த‌ல் கூடாது.

சார்ல்ஸ் ச‌ந்தியாகோ
கிள்ளான் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர்.


மூன்றாவது ந‌ப‌ர் த‌லையிடுவ‌தாக கூறிய மூசாவின் வாக்குமூல‌த்தில் விசார‌னை தேவை.

Posted: 13 Sep 2010 12:52 AM PDT

ஒரு சில‌ நேர‌ங்களில் சுமூக‌மான‌ ந‌ட்பு க‌ச‌ப்பான‌ முடிவுக்கு இட்டுச்செல்லலாம்.இது அண்மையில் காவ‌ல் துறையில் மூன்றாம் த‌ர‌ப்பின‌ர் த‌லையிடுவ‌து ப‌ற்றிய‌ போலியான ம‌ற்றும் நிச்சிய‌மில்லாத‌ கூற்றுக‌ளை நாட்டின் த‌லைமை காவ‌ல் அதிகாரி வெளியிட்டிருந்த‌து போல்தான் ஆகும்.
காவ‌ல் துறையில் மிக‌ அள‌வுக்கதிக‌மாக‌ த‌லையிடும் “மூன்றாம் த‌ர‌ப்புக‌ளில்” உள்துறை அமைச்சும் (Home Ministry) ஒன்று என‌ மூசா ஹ‌சான் கூறியுள்ளார்.
அனைத்து த‌ர‌ப்பின‌ரும் த‌லையிடுகின்ற‌ன‌ர்.ம‌ந்த‌ரி ச‌பையிலிருந்தும் (People from ministry itself) , வெளியாட்க‌ள் ம‌ற்றும் தன் சுயந‌ல‌னுக்காக‌ த‌வ‌றான‌ விஷ‌ய‌ங்க‌ளை/ காரிய‌ங்க‌ள் செய்ப‌வ‌ர்க‌ள் என‌ அவ‌ர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

மூசா த‌ன் அதிகாரிக‌ளையும் ம‌ற்ற‌ ஆட்களையும் “மேல‌திகாரி ம‌ற்றும் வெளியிலிருந்து வ‌ரும் அழுத்த‌தில் வச‌ப்படாம‌ல் இருக்கவும், எல்லாவ‌ற்றுக்கும் “ச‌ரி ஐயா” என்று இல்லாம‌ல் ந‌ட‌ந்து கொள்ள‌ வேண்டும் என‌ நினைவுறுத்தியுள்ளார்.

நோன்பு பெருநாள் கால‌ க‌ட்ட‌த்தில் த‌ம‌து ப‌த‌வியும் அதிகார‌மும் ப‌றிப்போகும் எல்லையில் உள்ள‌ மூசா அவ‌ர‌து ம‌ன‌க்க‌ச‌ப்புக‌ளை இவ்வாறு வெளிப்ப‌டுத்தியுள்ள‌தில் என‌க்கு எந்த‌வொரு ஆச்ச‌ரிய‌மும் இல்லை.அர‌ச‌ ம‌ந்திரிக‌ள் மீதான‌ அவ‌ர‌து தாக்க‌ல், உள்துறை அமைச்ச‌ர் இஷாமுடின் உசின்(Home Minister Hishamudin Hussein) அவ‌ர்க‌ளை மிக‌ துள்ளியாமாகவும் ம‌றைமுக‌மாக‌வும் சாடியிருந்த‌து, அவ‌ர‌து நேர்மையின்மையை பிர‌திப‌லிக்கின்ற‌து.
அப்ப‌டி ஒருக்கால், மூசா காவ‌ல்துறையை சுத்தப்ப‌டுத்த‌வோ அல்ல‌து மாற்ற‌ம் கொண்டு வ‌ர‌ வேண்டும் என‌ தீவிர‌மாக‌ எண்ணியிருந்தால், எந்த‌வொரு ஒளிவு ம‌றைவில்லாம‌ல் ம‌லேசியா ஊழல் துய‌ர் துடைப்பு மைய‌ம் ( Malaysian Anti-Corruption Commision- MACC)-இட‌ம் புகார் கொடுத்திருக்க‌ வேண்டும். அதிலும் ஒருவேளை அஃது ஊழ‌லில் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டிருந்தாலோ அல்ல‌து அர‌சிய‌ல் செல்வாக்கை ப‌ய‌ன்ப‌டுத்துப‌வ‌ர்களாக இருந்தாலோ ச‌ரி புகார் செய்திருக்க‌லாமே.
ப‌த‌வி வில‌கும் முன்ன‌ர் த‌ன‌து எதிரிக‌ளின் மார்பில் குண்டு பாய்ச்சுவ‌து போன்ற‌ மூசாவின் செய‌ல், காவ‌ல்துறையின் மீதும் நாட்டின் மீதும் எந்த‌வொரு அக்க‌றையும் இல்லை என‌ தெள்ள‌த் தெளிவாக‌ தெரிகிற‌து.
அத்த‌லைமைய‌திகாரியின் அறிக்கை சுவ‌டுக் கூட‌ ஒரு குழப்பமாகவும் தெளிவில்லாம‌லும் இருக்கிற‌து.
அவ‌ர‌து நான்காண்டுகால‌ அதிகார‌த்தில், அள‌வுக்க‌திக‌மான‌ போலிஸ் ப‌டைக‌ள் ம‌ற்றும் அதிகார‌ம், க‌ல‌வ‌ர‌ம்‍-எதிராக (Anti-riot) இருந்த‌ த‌ர‌ப்பின‌ரர்க‌ளுக்கு ப‌திலாக பிர‌ம்பு உப‌யோகித்த‌ல், அமைதி மறிய‌லுக்கு எதிராக‌வும், மெழுகுவ‌ர்த்தி ஏந்தி க‌ண்விழிக்கும் ஊர்வ‌ல‌ம் போன்ற‌வ‌ற்றைக‌ளுக்கு எதிராக‌வும் ந‌ட‌வ‌டிக்கை,சிறையில் இருப்ப‌வ‌ர்க‌ளின் ம‌ர‌ண‌ எண்ணிக்கை அதிக‌ரிப்பு ம‌ற்றும் அதிகார‌த்தை த‌வ‌றாக‌வும் தகாத‌ முறையிலும் ப‌ய‌ன்ப‌டுத்தும் அதிகாரிக‌ளின் எண்ணிக்கை அதிக‌ரிப்பு என‌ தொட‌ர்ந்து விம‌ர்சிக்கும் வகையில் உள்ளது.
ஆனால் ச‌ற்று நேர‌த்தில மூசா, காவ‌ல் ப‌டையின‌ர் எந்த‌வொரு த‌ய‌க்க‌மும் இன்றி ஆழுங்க‌ட்சியின் பாய்க்குள் நுழைவார்கள் என்ப‌துப்போல் சித்த‌ரித்துள்ளார்.
ஒரு வேளை மூசா ப‌ணியிலிருந்து ஓய்வு பெரும் முன், மேலிட‌த்திலிருந்து யார் யார் எல்லாம் த‌லையிடுகிறார்க‌ள் எனும் தெளிவான‌ த‌க‌வ‌ல்க‌ளையும் விள‌க்க‌ங்க‌ள் த‌ந்து, சில‌ ந‌ல்ல காரிய‌ங்க‌ள் செய்ய‌ முய‌ற்சிக்கின்றார் போல‌. அதும‌ட்டுமில்லாது, போலிஸ் அதிகாரிக‌ள் புலான் விசாரனை மிக‌ சுல‌ப‌மாக‌ மேற்கொள்ள‌ அவ‌ர் அதிகார‌ப்பூர்வ‌ புகாரும் செய்துள்ளார் என்ப‌து இங்கு குறிப்பிட‌த்த‌க்க‌து.
இப்போதைக்கு, மூசாவிட‌மிருந்து வெளியாகி இருக்கும் த‌னிப்ப‌ட்ட‌ தாக்குத‌ல், சில‌ பேரின் சிந்த‌னையையும் புருவ‌த்தையும் தூக்க தூண்டியுள்ள‌து. இத‌னால்,அவ‌ர‌து க‌ண்ணிய‌த்திலும் புக‌ழிலும் மேலும் ப‌ல‌ ப‌ல‌த்த‌ ச‌வுக்க‌டிக‌ள் வ‌ர‌க்கூடும்.

சார்ல்ஸ் ச‌ந்தியாகோ

கிள்ளான் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர்.


(0) Comments

Leave a Response

Sayap Parti